Tuesday, June 17, 2014
இலங்கை::காவல்துறை ஊரடங்குச் சட்டம் தற்காலிக அடிப்படையில் தளர்த்தப்பட்டுள்ளது.
பேருவளை மற்றும் அலுத்கம பிரதேசங்களில் ஏற்பட்ட பதற்ற நிலைமையைத் தொடர்ந்து
குறித்த இரண்டு காவல்துறை பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் காவல்துறை
ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. காலை 8.00 மணி முதல் நண்பகல்
12.00 மணி வரையில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்
பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி
செய்து கொள்வதற்காக இவ்வாறு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ளதாகக்
குறிப்பிட்டுள்ளார். எனினும், பொதுமக்கள் ஒன்று கூடல்கள் கூட்டங்களை
நடத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.
மக்கள் ஒன்றிணைந்து கூட்டங்களையோ அல்லது வேறும் வழிகளினலான ஒன்று கூடல்களையோ நடத்தக் கூடாது என காவல்துறையினர் அறிவித்துள்ளனர். இதேவேளை, காலி வெலிபன்ன பிரதேசத்திலும் முஸ்லிம்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பொதுபல சேனா இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் இந்த தாக்குதலை நடத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதல்களில் முஸ்லிம் கடைகள் வீடுகளுக்கு சேதம் விளைவிக்கப்பட்டு;ள்ளதாகவும், தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததாக பதிவான தகவல்கள் இதுவரையில் உறுதி செய்யப்படவில்லை. வெலிபன்ன அலுத்கம நகரிற்கு அண்டைய நகரம் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment