Pages

Tuesday, June 17, 2014

சுற்றுலாப் பயணிகளைப் போன்று முஸ்லிம் கடும்போக்காளர்கள் நாட்டுக்குள் பிரவேசிக்கின்றனர்: சம்பிக்க ரணவக்க!

Tuesday, June 17, 2014
இலங்கை::முஸ்லிம் கடும்போக்காளர்களுக்கு இலங்கையில் புகலிடம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
 
சுற்றுலாப் பயணிகளைப் போன்று முஸ்லிம் கடும்போக்காளர்கள் நாட்டுக்குள் பிரவேசிக்கின்றனர்.
நாட்டுக்குள் பிரவேசிக்கும் கடும்போக்காளர்களுக்கு சில முஸ்லிம்,  கிறிஸ்தவ மதத் தலைவர்கள் அடைக்கலம் வழங்குகின்றனர்.
 
முஸ்லிம் கடும்போக்குவாத அமைப்புக்களான தாவுத் ஜமாத் மற்றும் தப்லிக் ஜமாத் ஆகியன நாட்டின் சில பகுதிகளில் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளன.
 
இவ்வாறான சம்பவங்கள் குறித்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை.
2013ம் ஆண்டில் நாட்டு;க்குள் 12 லட்சம் சுற்றுலாப் பயணிகள் பிரவேசித்துள்ளதாகவும், இதில் நான்கு லட்சம் பேர் இந்தியா,  பாகிஸ்தான் மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளிலிருந்து பயணம் செய்துள்ளனர்.
இதில் 1400 பேர் அகதிக் கோரிக்கைக்கு விண்ணப்பித்துள்ளனர்.
 
மதக் கடும்போக்குவாதங்களை தடுக்க வேண்டுமாயின் அரசாங்கம் கடுமையான தீர்மானங்களை எடுக்க வேண்டியது அவசியமானது என சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment