Tuesday, June 17, 2014
இலங்கை::12 அம்ச யோசனைத் திட்டத்தை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்றுக் கொண்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.
கொள்கை அடிப்படையில் இந்த யோசனைத் திட்டத்தை ஏற்றுக் கொள்வதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு அறிவித்துள்ளது என தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் முஹமட் முசம்மில் தெரிவித்துள்ளார்.
12அம்ச கோரிக்கைகள் தொடர்பில் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் தேசிய சுதந்திர முன்னணிக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மத்திய செயற்குழுவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
யோசனைத் திட்டத்தினை அடிப்படையாகக் கொண்டு ஓர் செயற் திட்டமொன்றை உருவாக்க இரு தரப்பினரும் இணங்கியதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த யோசனைத் திட்டங்கள் குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும். யோசனைத் திட்டம் குறித்த ஜனாதிபதியின் நேரடிக் கருத்துக்களை பெற்றுக்கொள்ளவே விரும்புகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment