Pages

Monday, June 16, 2014

புலிகள் சமாதானத்திற்கு உடன்படவில்லை: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!

புலிகள் சமாதானத்திற்கு உடன்படவில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாட்டை ஆட்சி செய்த பல அரசாங்கங்கள் புலிகளுடன் சமாதான முனைப்புக்களை தொடர்ந்த போதிலும், புலிகள் வேறும் கொள்கைகளுடன் செயற்பட்டு வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

புலிப் பயங்கரவாதிகள் பிரிவினைவாதத்தை கைவிட விரும்பாத காரணத்தினால், யுத்தத்தின் ஊடாக புலிகளை தோற்கடிக்க நேரிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

பொலியாவில் வைத்து ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பல நாட்டுத் தலைவர்களுடன் சந்திப்புக்களை நடத்தியுள்ளார்.

புலிகள் அரசியல் தலைவர்கள், அப்பாவி பொதுமக்கைள கொன்றதுடன் பொதுச் சொத்துக்களுக்கு பாரியளவில் சேதம் விளைவித்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை ஜனாதிபதி, இந்திய பிரதமர், தமிழ் அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட பலரையும் புலிகள் படுகொலை செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

புலிகள் சிறு குழந்தைகளை கூட விட்டு வைக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆட்சி செய்த அனைத்து அரசாங்கங்களும் பேச்சுவார்த்தை ஊடாக பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சித்த போதிலும், தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒருதலைப்பட்சமான தீர்மானங்கள் முயற்சியை தோல்வியடைச் செய்ததாகத் தெரிவித்துள்ளார்.

யுத்தத்தின் பின்னர் இடம்பெயர் மக்கள் மீள் குடியேற்றப்பட்டுள்ளதாகவும், முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கும் நோக்கில் ஜனாதிபதி ஆணைக்குழுக்கள் மற்றும் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு ஆகியவற்றை நிறுவியதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாடு பாரியளவில் அபிவிருத்தி அடைந்து வரும் நிலையில் சில புறச் சக்திகளின் நாட்டின் உள்விவகாரங்களில் தலையீடு செய்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை சுமத்தி நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு குந்தகம் ஏற்படுத்த முயற்சிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment