Pages

Sunday, June 15, 2014

காதோடு காதாக<<காதோடு காதாக<
Sunday, June 15, 2014
* தவறைத் தவறென்று சுட்டிக் காட்டுவதில் என்ன தவறு?
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அல்லது அதன் உறுப்பினர்கள் விடும் தவறுகளைச் சுட்டிக்காட்டினால் உடனே அவர்களுக்கு அரசாங்கச் சார்பு சாயம் பூசுவதில் சிலர் குறியாக உள்ளனர். கூட்டமைப்பு தவறு செய்தாலும் கைதட்டிப் பாராட்ட வேண்டும் என்பது இச்சிலரது விருப்பம். இப்படித்தானே புலிகளையும் இல்லாமல் செய்ய நேர்ந்தது. இனியாவது தவறைத் தவறென்று சுட்டிக்காட்டுவதில் என்ன தவறு இருக்கிறது?
 
* முன்கூட்டியே உஷாராகிவிட்ட வடக்கு மாகாண முதலமைச்சர்
தற்போது வடபகுதியில் விழாக்கள் மற்றும் வைபவங்களில் கலந்து கொள்ளும் அம்மாகாண முதலமைச்சர் உரையாற்றுகையில் இடையிடையே ஒரு வசனத்தை மறந்துவிடாது மிகவும் ஞாபகமாகக் கூறிவருவதை அவதானிக்க முடிகிறது. அதாவது இது எனது கருத்தே அன்றி எமது கட்சியின் கருத்தல்ல என்பதே அதுவாகும். அவளைத் தொடுவானேன் கவலைப்படுவானேன் என்பதாக முதல்வர் முன்கூட்டியே உசாராகிவிட்டாராம். இல்லாவிடின் நீதியரசராக இவர் இருந்த காலத்தில் விசாரணைக் கூண்டில் கைகட்டி நின்றவர்களுக்கும் இவர் கைகட்டி நின்று விளக்கம் கூற வேண்டியுள்ளதே?
 
* தள்ளாத வயதிலும் இளமைத்துடிப்போடு செய்து முடித்த மாபெரும் சாதனை
கொழும்பு தமிழ்ச் சங்க வீதிக்கு சங்கம் வீதி எனப் பெயர்மாற்றி பலருக்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார் பெரியவர் வேலணை வேணியன். தனது கட்சிக்குள்ளேயே எதிர்ப்புக்கள் கிளம்பிய போதும் தனது முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமாதித்தன் போல ஐயா தனது தள்ளாத வயதிலும் இளமைத்துடிப்போடு இவ்விடயத்தைச் செய்து முடித்துள்ளார். அவரைப் பாராட்ட வேண்டும். பாராட்ட மனமில்லாதோர் சங்கம் வீதியால் சென்று அழகுறக் காட்சிதரும் அந்தப் பெயர்ப்பலகையையாவது பார்த்துவிடுங்கள்.

No comments:

Post a Comment