Pages

Sunday, June 15, 2014

ஒபாமாவின் செல்வாக்கு சரிந்தது: கருத்துக் கணிப்பு

Sunday, June 15, 2014
வாஷிங்டன்::அமெரிக்காவில் அதிபர் ஒபாமாவின் செல்வாக்கு மக்கள் மத்தியில் மேலும் சரிந்திருப்பதாக சி.என்.என். ஒ.ஆர்.சி. சர்வதேச நிறுவனத்தின் கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.
 
ஒபாமாவுக்கு தற்போது 47 சதவீத பேர் மட்டும் ஆதரவு தெரிவித்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த நிறுவன இயக்குனர் கீட்டிங் ஹோலந்து கூறுகையில்,
 
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷூக்கு எதிராக 51 சதவீத பேரும், ஆதரவாக 46 சதவீத பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். இது வெள்ளை மாளிகையில் இருந்து 2009ம் ஆண்டு ஜார்ஜ் புஷ் வெளியேறும் போது பெற்றிருந்த ஆதரவை விட அதிகமாகும். இதே போன்று ஒபாமாவுக்கு எதிராக 51 சதவீத பேரும், ஆதரவாக 47 சதவீத பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
 
இதில் ஒபாமாவும், ஜார்ஜ் புஷ்ஷ$ம் சம நிலையில் உள்ளனர். ஒபாமாவுக்கு ஆதரவை விட எதிர்ப்பு அதிகரித்திருப்பது இதுவே முதல் முறையாகும். மேலும் முந்தைய இரு அதிபர்களை விட ஜார்ஜ் புஷ் மற்றும் ஒபாமாவின் செல்வாக்கு மிகவும் சரிந்துள்ளது. முன்னாள் அதிபர்கள் பில் கிளிண்டனுக்கு ஆதரவாக 68 சதவீத பேரும், ஜார்ஜ் எச். டபுள்யூ. புஷ்ஷ$க்கு ஆதரவாக 58 சதவீத பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
 
முன்னாள் வெளியுறவு துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனின் செல்வாக்கும் சரிந்துள்ளது. அவரது செல்வாக்கு 67 சதவீதத்தில் இருந்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் 59 சதவீதமாக குறைந்து தற்போது 55 சதவீதமாக உள்ளது என்று கீட்டிங் ஹோலந்து தெரிவித்தார்.

No comments:

Post a Comment