Wednesday, June, 11, 2014
இலங்கை::ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைக் கூட்டத் தொடரின் 26 ஆவது அமர்வில் நவநீதம் பிள்ளை கூறிய, இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விரிவான விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கப் போவதில்லை என அரசு அறிவித்துள்ளது.
இக் கூட்டத் தொடரில் நவநீதம் பிள்ளையாற்றிய உரையைத் தொடந்து இலங்கை பிரதிநிதிகள் குழுத் தலைவர் ரவிநாத ஆரியசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
யுத்தம் முடிவடைந்தும் புலிகள் இயக்கம் முற்றாக அழிக்கப்பட்ட நிலையிலும் இவ் அமைப்பின் செயற்பாடுகள் சர்வதேச ரீதியில் தொடர்ந்தும் நடை பெறுவதாக ரவிநாத ஆரியசிங்க சுட்டிக் காட்டியுள்ளார்.

No comments:
Post a Comment