Wednesday, June, 11, 2014
லண்டன்::இங்கிலாந்து பள்ளிகளில் மாணவர்களிடம் தீவிரவாதத்தை பரப்புவதை தடுப்பதற்காக திடீர் ரெய்டு நடத்த அதிகாரிகளுக்கு பிரதமர் டேவிட் கேமரூன் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
இங்கிலாந்தில் உள்ள பெர்மிங்காம்மில் பல்வேறு பள்ளிகளின் நிர்வாகங்களை, முஸ்லிம் தீவிரவாதிகள் கைப்பற்றி அதன் மூலம் மாணவர்கள் மத்தியில் தீவிரவாதத்தை பரப்பி வருவதாக அந்நாட்டு அரசுக்கு அடிக்கடி புகார்கள் வந்தன. பள்ளி மாணவர்களுக்கிடையே தீவிரவாதத்தை பரப்பும் நடவடிக்கையை தடுக்க இங்கிலாந்து அரசு முயற்சி மேற்கொண்டுள்ளதுய. சமிபத்தில் சில பள்ளிகளில் அரசு அதிகாரிகள் நடத்திய சோதனையில் தீவிரவாதிகளின் செயல் உறுதி செய்யப்பட்டுள்ளது. பர்மிங்காம்மில் உள்ள 21 பள்ளிகளில் சோதனை நடத்தினர். இதில், 5 பள்ளிகளில் தீவிரவாத போதனைகளை தடுக்க உரிய வழிமுறைகள் இல்லை என்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து தீவிரவாதத்தை பள்ளிகளில் பரப்புவதை தடுப்பதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு கல்வி துறை செயலாளர்களுக்கு பிரதமர் டேவிட் கேமரூன் உத்தரவிட்டிரு்ககிறார். மேலும், பள்ளிகளில் எந்த அறிவிப்பும் இல்லாமல் திடீர் ரெய்டுகளை நடத்த வேண்டும் என்று டேவிடே கேமரூன் உத்தரவிட்டுள்ளார். இது பற்றி டேவிட் கூறுகயில், மாணவர்கள் தீவிரவாத திசைக்கு செல்லாமல் காப்பாற்ற வேண்டியது அரசின் கடமையாகும். எனவே, பள்ளிகளில் சோதனை நடத்தப்படுவதில் தவறில்லை. தீவிரவாதத்தை தடுக்க அதற்கான தனிப் படையினர் ஆய்வு செய்து தற்போதுள்ள நிலைமை குறித்து அரசுக்கு தெரிவிக்க உத்தரவிட்டுள்ளேன் என்றார்.மேலும், இந்த விவகாரம் தொடர்பாக கடந்த வாரம் உள்துறை அமைச்சர் தெரசா மே மற்றும் கல்வித் துறை அமைச்சர் மைக்கேல் கோவே ஆகியோர் விவாதித்துள்ளனர்.

No comments:
Post a Comment