Tuesday, June 10, 2014இலங்கை::ஐக்கிய நாடுகள் மனித உரிமை இந்த தீர்மானத்திற்கு அமைவாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை, பெரும்பாலும் இன்றைய தினம் விசாரணைக் குழுவின் உறுப்பினர்கள் பற்றிய தகவல்களை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 26ம் அமர்வுகள் இன்றைய தினம் ஜெனீவாவில் ஆரம்பாகவுள்ளது.
இவ்வாறான ஓர் பின்னணியில், சர்வதேச சுயாதீன விசாரணைகளை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என இலங்கை அரசாங்கம் ஏற்கனவே திட்டவட்டமாக அறிவித்துள்ளது.நவனீதம்பிள்ளையினால் நியமிக்கப்படும் விசாரணைக்குழுவினை இலங்கைக்குள் அனுமதிப்பதா இல்லையா என்பதனை பாராளுமன்றமே தீர்மானிக்க வேண்டுமென ஆளும் கட்சி தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் அலரி மாளிகையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஐக்கிய நடுகளின் விசாரணைக்குழுவினர் இலங்கைக்கு விஜயம் செய்வதனை அனுமதிப்பதா இல்லையா என்பது குறித்து பாராளுமன்றில் விவாதம் நடாத்தி, வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.
இந்த வாக்கெடுப்பில் பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஆதரவளித்தால் பிரதிநிதிகள் குழுவினர் நாட்டுக்குள் பிரவேசிக்க வீசா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பான்மையான உறுப்பினர்கள் எதிர்த்தால் அனுமதி மறுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையினால்
நியமிக்கப்பட உள்ள சர்வதேச விசாரணைக்குழுவினரை இலங்கைக்குள் அனுமதிப்பது
தொடர்பில் பாராளுமன்றில் வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. இலங்கையில்
இடம்பெற்ற யுத்த குற்றச் செயல்கள் மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்கள்
தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்
பேரவையின் மார்ச் மாத அமர்வுகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
No comments:
Post a Comment