Pages

Friday, June 6, 2014

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை சிறுபான்மை மக்களின் உரிமைகளை உறுதி செய்ய வழியமைக்கும்: இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி மற்றம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்!

Friday, June 06, 2014
இலங்கை::நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை சிறுபான்மை மக்களின் உரிமைகளை உறுதி செய்ய வழியமைக்கும் என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி மற்றம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தெரிவித்துள்ளன. நிறைவேற்ற அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்க வேண்டுமென வலியுறுத்தும் எந்தவொரு கட்சிக்கும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது ஆதரவளிக்கப்பட மாட்டாது என குறித்த மூன்று சிறுபான்மை கட்சிகளும் தெரிவித்துள்ளன. சிறுபான்மை மக்களின் உரிமைகளை உறுதி செய்வதற்கு நிறைவேற்ற அதிகார ஜனாதிபதி முறைமை அவசியமானது என சுட்டிக்காட்டியுள்ளன.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையும் தற்போதைய தேர்தல் முறைமையும் சிறுபான்மை மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் அமைந்துள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பெ.இராதகிரஸ்ணன் தெரிவித்துள்ளார். எனவே, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையின் கீழா ஜனாதிபதி ஒருவருடன் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண முடியும் என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் முத்து சிவலிங்கம் தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஆதரிக்கும் ஓர் கட்சிக்கே ஆதரவளிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி இல்லதொழிப்பு குறித்து எதிர்க்கட்சிகள் இதுவரையில் சரியான நிலைப்பாட்டை வெளியிடவில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் ஜனாதிபதி தேர்தலின் போது கட்சிகளின் நிலைப்பாட்டின் அடிப்படையிலேயே யாருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து தீர்மானிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை முற்று முழுதாக இல்லாதொழிக்கப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிறிய மாற்றங்களைச் செய்வதனை எதிர்க்கவில்லை என்ற போதிலும் நிறைவேற்ற அதிகாரம் இல்லதொழிக்கப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment