Pages

Friday, June 6, 2014

குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமானது: சபாநாயகர் சமால் ராஜபக்ஷ!

Friday, June 06, 2014
இலங்கை::குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படவில்லை என இலங்கைக்கு எதிராக சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமானது என சபாநாயகர் சமால் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
 
பிரித்தானிய பாராளுமன்றிலோ அல்லது வேறும் நிறுவனங்களிலோ இலங்கைக்கு எதிராக சுமத்தப்பட்டு வரும் போலி குற்றச்சாட்டுக்கள் முறியடிக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.

யுத்த காலத்தில் இடம்பெற்ற குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படாத நிலைமை நீடித்து வருவதாக சர்வதேச ரீதியில் இலங்கைக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. வெளிநாட்டு பாராளுமன்றங்களில் இலங்கை தொடர்பில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு இலங்கை பாராளுமன்றம் உரிய முறையில் பதிலளிக்கத் தவறியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

புலிகளுக்கு ஆதரவான புலம்பெயர் தமிழர்கள் எவ்வாறு பிரித்தானிய அரசியல்வாதிகளின் ஆதரவினை பெற்றுக் கொண்டார்கள் என்பது பற்றி உள்நாட்டு வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment