Friday, June 06, 2014
இலங்கை::புலிகள் அமைப்பின் அரசியல் துறையில் பிரதானியாக இருந்த எழிலன் மற்றும் குழுவினரின் தலைமறைவு சம்பந்தமாக ஆனந்தி சசிதரனால் வவுனியா நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு முல்லைத்தீவு நீதிமன்றத்திற்க்கு மாற்றப்பட்டதுடன் 2014 ஆண்டு 06ஆம் மாதம் 05 ஆம் திகதி இந்த வழக்கு விசாரணைக்கெடுக்கப்பட்டது.
இந்த வழக்கிற்க்கு ஆதரவளிக்கும் வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னனியைச் சேர்ந்த சுரேஷ் பிரேமசந்திர, சிவாஜிலிங்கம், செல்வராசா கஜேந்ரன், கஜேந்ர குமார் பொன்னம்பலம், துரைராச ரவிகரன், அன்டனி ஜெகநாதன் போன்றவர்களுடன் 25 இற்கும் 30 இற்கும் இடைப்பட்ட குழுவினர் முல்லைத்தீவு பிரதேச செயலகத்திற்கு முன்பாக நேற்று ஆதரவு ஆர்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.
எழிலன் மற்றும் குழுவினரால் இறுதி யுத்த காலத்தில் கடத்தப்பட்டு இது வரையிலும் எந்த தகவலும் கிடைக்காத சிறுவர்கள் மற்றும் தமது கணவர்களை இழந்த 300க்கும் மேற்பட்ட உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் கடத்தப்பட்டவர்களின் புகைப்படங்களை ஏந்திய வண்ணம் எழிலன் மற்றும் ஆனந்திக்கு எதிராக ஆர்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர் இதன் போது அவ்விடத்திற்கு வந்த சில நபர்களுக்கும், ஆனந்தி சசிதரனுக்கு ஆதரவளிக்கும் குழுவினருக்குமிடையில் முறுகல் நிலை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து பொலிஸார் மூலம் இப்பிரச்சனையை சுமூகமாக்கியதுடன் அங்கு கூடியிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்தவர்கள் அவ்விடத்தை விட்டு விலகிச் சென்றதன் பின்னர் மற்றய குழுவினரும் அமைதியான முறையில் அவ்விடத்தை விட்டு திரும்பிச் சென்றனர்.
இதே சமயம் இங்கு வந்திருந்த ஊடகவியலாளர்களிடம் பாதிக்கப்பற்ற பெற்றோரும் உரவினர்களும் எழிலன் மற்றும் குழுவினரால் இறுதி யுத்த காலத்தில் கடத்தப்பட்டு இது வரையிலும் எந்த தகவலும் கிடைக்காத சிறுவர்கள் மற்றும் தமது உரவுகள் குறித்து விளக்கமளித்தனர்.




No comments:
Post a Comment