Wednesday, April 09, 2014
சென்னை::தமிழகம் புதுவையில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளிலும்
அ.தி.மு.க. வெற்றிபெறும் என்பது தி.மு.க.வுக்கே தெரியும் என்று முதல்வர்
ஜெயலலிதா கூறியுள்ளார். அரக்கோணத்தில் பிரச்சாரம் செய்தபின் திருவள்ளூரில்
அ.தி.மு.க. வேட்பாளர் வேணுகோபாலை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது
அவர் பேசியதாவது:-
நடைபெற இருக்கின்ற மக்களவைத் தேர்தல் வெறும் ஆட்சி மாற்றத்திற்காக
நடைபெறுகின்ற சாதாரணத் தேர்தல் அல்ல. இந்திய மக்களுக்கு விடுதலையைப்
பெற்றுத் தருகின்ற தேர்தல். அண்டை நாடுகளின் அச்சுறுத்தல்களில் இருந்து
இந்தியாவை காக்கின்ற தேர்தல், பொருளாதார சீரழிவிலிருந்து இந்தியாவை
மீட்கும் தேர்தல், ஊழல் சாம்ராஜ்யத்தில் இருந்து, இந்திய நாட்டை
விடுவிப்பதற்கான தேர்தல், உங்களின் துன்பங்களை போக்குகின்ற தேர்தல், உங்களை
துயரங்களிலில் இருந்து விடுவிக்கின்ற தேர்தல்.
காங்கிரஸ் தலைமையிலான மத்திய கூட்டணி ஆட்சியில் என்னென்ன
பிரச்சனைகளுக்கு நீங்கள் ஆளாக்கப்பட்டு இருக்கிறீர்கள் என்பதை சொல்லி
மாளாது. விலைவாசி உயர்வு, பண வீக்கம், மாதா மாதம் பெட்ரோல், டீசல், விலை
உயர்வு, வேலை வாய்ப்பின்மை, தொழில் வளர்ச்சியின்மை, வேளாண் உற்பத்தியில்
மந்த நிலை என மத்திய காங்கிரஸ் ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட பிரச்சனைகளை
அடுக்கிக் கொண்டே போகலாம். இது போன்ற மோசமான அரசை நாம் பார்த்ததே இல்லை
என்று சொல்லும் அளவுக்கு மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சி நடத்தியது.
இப்படி எல்லா விதத்திலும் சாமானிய மக்களுக்கு எதிரான மத்திய காங்கிரஸ்
கூட்டணி அரசில் சில மாதங்களுக்கு முன்பு வரை அங்கம் வகித்து ஒட்டி உறவாடிய
கட்சி தி.மு.க. என்பதை மறந்துவிடாதீர்கள்.
தமிழ் நாட்டிற்கே தலைகுனிவை ஏற்படுத்தும் வகையில் 2 லட்சம் கோடி ரூபாய்
அளவுக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழலை முன்னின்று நடத்திய கட்சி தி.மு.க.
இப்படி காங்கிரசும், தி.மு.க_வும் சேர்ந்து சாமானிய, ஏழை, எளிய நடுத்தர
மக்களுக்கு எதிராக செயல்பட்டதன் காரணமாக, இந்திய நாட்டின் பொருளாதாரமே
ஸ்தம்பித்துவிட்டது. இப்படிப்பட்ட கொடுங்கோல் அரசிடமிருந்து இந்திய
நாட்டை காப்பாற்றுவதற்கான தருணம் வந்துவிட்டது. தமிழ் நாட்டிற்கு
தேவையானவற்றை மத்திய அரசிடம் இருந்து கேட்டுப் பெறுகின்ற காலம்
கனிந்துவிட்டது. இந்த வாய்ப்பின் மூலம் உங்கள் வாக்கு உரிமையை நீங்கள்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஆதரவாக செலுத்த
வேண்டும் என்று சொல்வதற்காகத் தான் உங்களையெல்லாம் நேரில் சந்திக்க இன்று
இங்கே வந்திருக்கிறேன்.
2011_ஆம் ஆண்டு நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், அனைத்திந்திய
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை எந்த அளவுக்கு வெற்றி பெற வைத்தீர்களோ,
அதைவிட மகத்தான வெற்றியை இந்த நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தலில்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு நீங்கள் வழங்க
வேண்டும் என்ற வேண்டுகோளினை உங்கள் முன் வைப்பதற்காகவே இன்று இங்கே
வந்திருக்கிறேன். எனது வேண்டுகோளை நீங்கள் நிச்சயம் நிறைவேற்றுவீர்கள் என்ற
நம்பிக்கை எனக்கு முழுமையாக உண்டு. செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?
(செய்வோம் என பலத்த கரகோஷம்)
கடந்த 34 மாத கால ஆட்சியில் மத்திய அரசின் மாற்றாந்தாய்
மனப்பான்மையையும், திமுக_வின் சதித் திட்டங்களையும் மீறி, தமிழக மக்களுக்கு
என்னென்ன நலத் திட்டங்களை, வளர்ச்சித் திட்டங்களை, தொலைநோக்குத்
திட்டங்களை என்னால் தர முடியுமோ, அவற்றையெல்லாம் அளித்து இருக்கிறேன்;
அளித்துக் கொண்டும் வருகிறேன்.
விலையில்லா அரிசி வழங்கும் திட்டம், திருமண உதவித் தொகையுடன் கூடிய
தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம், விலையில்லா மிக்ஸி, கிரைண்டர் மற்றும்
மின்விசிறி
வழங்கும் திட்டம், ஏழை கிராமப்புற மக்களுக்கு கறவைப் பசுக்கள் மற்றும் வெள்ளாடுகள்
வழங்கும் திட்டம், சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் வழங்கப்படும் ஓய்வூதியம்
1,000 ரூபாயாக உயர்வு, மேல்நிலை வகுப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு
விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டம், விலையில்லா மடிக் கணினிகள்
வழங்கும் திட்டம், கட்டணமில்லா கல்வி, மாணவ, மாணவியருக்கு கட்டணமில்லா
பேருந்து வசதி, முதலமைச்சரின் விரிவாக்கப்பட்ட மருத்துவக் காப்பீட்டு
திட்டம், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம், இந்துக்கள் மானசரோவர்
மற்றும் முக்திநாத் புனிதப் பயணம் மேற்கொள்ள மானியம் வழங்கும் திட்டம்,
முதலமைச்சரின் சரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டம், தானே
புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு லட்சம் காங்கிரீட் வீடுகள் கட்டித்
தரும் திட்டம், நெசவாளர்களுக்கென 10,000 பசுமை வீடுகள் என எண்ணற்ற
திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. சமூகநீதி நிலைநாட்டப்பட்டு
வருகிறது.
சிறுபான்மையினர் நலன் என்று எடுத்துக் கொண்டால், உலமாக்களுக்கான
ஓய்வூதியத் தொகையை அதிகரித்தது, உலமாக்களின் எண்ணிக்கையை அதிகரித்தது,
புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளி வாசல்களுக்கு கிலோ
ஒரு ரூபாய் விலையில் அரிசி வழங்குவது, வக்பு வாரியத்திற்கு கூடுதல்
மானியத் தொகை வழங்கியது, கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் செல்ல மானியம் வழங்கி
வருவது என அடுக்கிக் கொண்டே செல்லலாம். தற்போது தமிழ் நாட்டில் நடைமுறையில்
உள்ள 3.5 விழுக்காடு
இட ஒதுக்கீட்டினை அதிகப்படுத்தித் தர வேண்டும் என்று இஸ்லாமிய
அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. இவர்களது கோரிக்கை மாநில
பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
மத்திய அரசின் தவறான கொள்கைகளால் உயர்ந்து வரும் விலைவாசியிலிருந்து
தமிழக மக்களை பாதுகாக்கும் வகையில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் 20
கிலோ விலையில்லா அரிசி, வெளிச் சந்தையில் ஒரு கிலோ அரிசி 20 ரூபாய்க்கு
விற்பனை, சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ஒரு லிட்டர் பாமாயில் 25
ரூபாய்க்கும், ஒரு கிலோ துவரம் பருப்பு 30 ரூபாய்க்கும், உளுத்தம் பருப்பு
30 ரூபாய்க்கும் விற்பனை, குறைந்த விலையில் காய்கறிகள் கிடைத்திட பண்ணைப்
பசுமை நுகர்வோர் கடைகள், சமையல் எரிவாயு மீதான மதிப்புக் கூட்டு வரி
முழுவதுமாக ரத்து, இப்படி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளேன். இதன்
காரணமாக தமிழகத்தில் விலைவாசி உயர்வு ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.
மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகள் காரணமாக இந்திய நாட்டில்
முதலீடுகள் குறைந்துள்ளன. ஏற்றுமதி குறைந்துள்ளது. நடப்புக் கணக்கில்
அதிகமான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பொய் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளது.
மொத்தத்தில், இந்தியப் பொருளாதாரமே சின்னாபின்னம் ஆக்கப்பட்டுவிட்டது.
அதன் சுமை ஏழைகளின் மீது சுமத்தப்பட்டுள்ளது. இந்த சுமையிலிருந்து
விடுபட தேவை மாறுதல்! அதற்கு வழி வகுக்க இருப்பது வரும் மக்களவைத் தேர்தல்!
என்பதை மறந்துவிடாதீர்கள்.
மாநில அரசால் மட்டுமே தீர்க்க இயலாத பிரச்சனைகள் பல உள்ளன. உதாரணமாக
மீனவர்கள் பிரச்சனை, அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனை, கச்சத் தீவு
பிரச்சனை, மண்ணெண்ணெய் ஒதுக்கீடு, நிலக்கரி ஒதுக்கீடு போன்ற
பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டிய பொறுப்பு மத்திய அரசிடம் தான் உள்ளது.
அதனை தற்போதுள்ள காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு செய்கிறதா? நிச்சயமாக
இல்லை. மாறாக, தமிழகத்துக்கும், தமிழக மக்களுக்கும் துரோகம் தான் இழைத்துக்
கொண்டிருக்கிறது மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு.
வருகின்ற மக்களவைத் தேர்தல் வெறும் ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல்
மட்டுமல்ல. இந்தியாவின் தலையெழுத்தையே, உங்களின் தலைவிதியையே மாற்றி
அமைக்கப் போகிற தேர்தல்.
மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் ஊழல்
கொடிகட்டி பறக்கிறது. 2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல், ஹெலிகாப்டர் ஊழல்,
நிலக்கரி ஊழல், காமன்வெல்த் விளையாட்டை நடத்தியதில் ஊழல், விமான என்ஜின்
வாங்கியதில் ஊழல் என ஊழல் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இதில், 2ஜி
ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழலை முன்னின்று நடத்திய கட்சி தி.மு.க. என்பதை
மறந்துவிடாதீர்கள். காங்கிரஸ் ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள் மூலம் மட்டும் பல
லட்சம் கோடி பொய் அளவிற்கு இந்திய அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு
இருக்கிறது என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
இப்படிப்பட்ட மக்கள் விரோத ஊழல் காங்கிரஸ் அரசை ஆட்சியிலிருந்து தூக்கி
எறிவதை குறிக்கோளாகக் கொண்டு வருகின்ற தேர்தலில் நீங்கள் உங்கள் ஜனநாயகக்
கடமையை ஆற்ற வேண்டும். அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியை டெபாசிட்
இழக்கச் செய்ய வேண்டும் என்று உங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா? (செய்வோம் என பலத்த கரகோஷம்)
கிட்டத்தட்ட 17 ஆண்டு காலம் மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்த
தி.மு.க., தமிழ் நாட்டிற்காக எதையாவது செய்ததா? இல்லை. 'மக்கள் நலம்'
'மக்கள் நலம்' என்று சொல்லி உங்களின் வாக்குகளைப் பெற்றார் கருணாநிதி.
ஆட்சியில் அமர்ந்தவுடன் உங்கள் நலத்தை மறந்துவிட்டார். இப்படிப்பட்ட
கட்சிக்கு, இந்தத் தேர்தலில் நீங்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும்; சவுக்கடி
கொடுத்து விரட்ட வேண்டும் என்று உங்களையெல்லாம் கேட்டுக் கொள்கிறேன்.
செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா? (செய்வோம் என பலத்த கரகோஷம்)
தமிழகம் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக விளங்க வேண்டும் என்றால்,
தமிழகத்திற்கு தேவையானவற்றை பெற வேண்டும் என்றால், அதற்கு ஒரே வழி
மத்தியிலே ஆட்சி மாற்றம். அந்த ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய வலிமையை
நீங்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வழங்க
வேண்டும்; எனது கரங்களை வலுப்படுத்த வேண்டும் என்று உங்களையெல்லாம்
அன்புடன் வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன். செய்வீர்களா? நீங்கள்
செய்வீர்களா? (செய்வோம் என பலத்த கரகோஷம்)
உங்கள் ஆதரவோடு உங்கள் ஆட்சி மத்தியில் அமையப் பெறும் போது,
இந்திய நாட்டை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லும் வகையில் ஏற்றுமதியை ஊக்குவிக்கவும், இறக்குமதியை தேவைக்கேற்ப செய்யவும்;
விலைவாசி உயர்வை கட்டுக்குள் கொண்டு வரவும்;
காவேரி, முல்லைப் பெரியாறு போன்ற நதிநீர்ப் பிரச்சனைகளில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டவும்;
தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும்;
இலங்கை போரின் போது இனப் படுகொலை செய்தவர்களை ஐக்கிய நாடுகள் சபை மூலம்
சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தரவும், தீர்மானத்தை இந்தியாவே
முன்மொழிய; வல்லரசு நாடுகளுக்கு இணையாக இந்திய ராணுவத்தை, தரைப்படையை,
கப்பற் படையை, விமானப் படையை நவீனமயம் ஆக்கவும்;
தமிழ் மொழியை ஆட்சி மொழியாக்கவும், சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை
வழக்காடு மொழியாக ஆக்கவும்;
சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு அறவே ஒழியவும்;
வெளிநாடுகளில் உள்ள கருப்புப் பணத்தை மீட்கவும்;
2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல், ஹெலிகாப்டர் ஊழல், நிலக்கரி ஊழல் என
காங்கிரஸ் தலைமையிலான மத்திய கூட்டணி ஆட்சியில் நிகழ்த்தப்பட்ட ஊழல்களுக்கு
காரணமானவர்களுக்கு நீதிமன்றம் மூலம் தண்டனை பெற்றுத் தரவும், இந்த ஊழல்கள்
மூலம் மத்திய அரசுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பை <டு கட்டவும்;
பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை நிர்ணயக் கொள்கையை மாற்றவும்,
பெட்ரோலியப் பொருட்களின் விலை ஓர் ஆண்டு முழுவதும் நிலையாக இருக்கவும்;
தனி நபருக்கான வருமான வரி உச்ச வரம்பினை 5 லட்சம் ரூபாயாக உயர்த்தவும்;
நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்திய நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பு, வெள்ளையர்கள் விரட்டப்பட
வேண்டும் என்ற மனநிலை மக்கள் மனங்களில் நிலவியது. தற்போது, இந்தியாவை
வேட்டைக் காடாக்கி, கொள்ளையடித்து, சின்னாபின்னமாக்கி, நாட்டையே சறையாடிய,
காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசை தூக்கி எறிய வேண்டும். இனி,
எதிர்காலத்திலும் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை மத்தியில் அமைய விடக் கூடாது
என்ற மன நிலையில் தான் நீங்கள் எல்லாம் இருக்கிறீர்கள் என்பதை நான்
அறிவேன். இந்தியா முழுவதும் இந்த நிலை தான் நிலவுகிறது. இந்திய
விடுதலைக்கு முன் மக்கள் மனதில் இருந்த அதே மன நிலை இந்தியா சுதந்திரம்
அடைந்து 66 ஆண்டுகள் கழித்து, தற்போது மக்கள் மனங்களில் மீண்டும்
உருவாகியுள்ளது.
நடைபெற இருக்கின்ற மக்களவைத் தேர்தல் மக்கள் விரோத ஆட்சியை,
முடிவுக்கு கொண்டு வரும் தேர்தல் மட்டுமல்ல, மக்களாட்சியை நிலைநாட்டும்
தேர்தல். இந்தத் தேர்தலின் மூலம் இந்திய நாட்டிலே நடைபெற்றுக்
கொண்டிருக்கின்ற குடும்ப ஆட்சிக்கு,
ஊழல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், அதன் மூலம் மக்களாட்சி
மலர வேண்டும். இதனை உங்களால் தான் சாதிக்க முடியும். செய்வீர்களா? நீங்கள்
செய்வீர்களா? (செய்வோம் என பலத்த கரகோஷம்)
மத்தியிலே மக்களாட்சி மலர்ந்தால் மட்டும் போதாது. அந்த ஆட்சி
தமிழகத்தின் ஆட்சியாக நமது ஆட்சியாக, அனைத்திந்திய அண்ணா திராவிட
முன்னேற்றக் கழகம் அங்கம் வகிக்கும் ஆட்சியாக அமைய வேண்டும். அப்பொழுது
தான், தமிழர்களின் உரிமைகள் நிலைநாட்டப்படும். தமிழர்களின் கோரிக்கைகள்
நிறைவேற்றப்படும். தமிழர்களின் நலன்கள் பாதுகாக்கப்படும். தமிழ்நாட்டு
மக்களின் வாழ்வு வளம் பெறும். இதன் அடிப்படையில் நீங்கள் எல்லாம்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை
சின்னத்தில் வாக்களித்து அவர்களை மகத்தான வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று
அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இந்த நேரத்தில் வாக்காளப் பெருமக்களாகிய நீங்கள், நான் சொல்வதை
கவனமாகக் கேட்க வேண்டும். அதனை உங்கள் மனதில் இறுத்திக் கொள்ள வேண்டும்
என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். உங்கள் வாக்கு என்பது உங்கள் உரிமை.
உங்கள் வாக்கு என்பது இந்த நாட்டின் சொத்து. உங்கள் வாக்குதான்
இந்தியாவின் தலைவிதியையே மாற்றி அமைக்கப் போகிறது. அத்தகைய சக்தி படைத்தது
உங்கள் வாக்கு. எனவே, உங்கள் வாக்கை வீணாக்கிவிடாதீர்கள்.
இந்த நாடாளுமன்றத் தேர்தலில் பல கட்சிகள் களம் இறங்கி உள்ளன. அந்தக்
கட்சியினரெல்லாம் உங்களிடம் வந்து வாக்கு கேட்கின்றனர். வேறு கட்சிகளுக்கு
நீங்கள் வாக்களித்தால் அதனால் யாருக்கும் எந்தப் பயனும் இருக்கப்
போவதில்லை. வேறு கட்சிகளுக்கு நீங்கள் வாக்களித்தால் அந்தக் கட்சிகளும்
வெற்றிபெறப் போவதில்லை. வாக்குகள் சிதறிவிடும், அவ்வளவு தான். அதனால்
உங்கள் வாக்கு வீணாகிவிடும். தயவுசெய்து உங்கள் வாக்கை
வீணாக்கிவிடாதீர்கள். மாறாக, வாக்காளப் பெருமக்களாகிய நீங்கள் அனைவரும் 40
தொகுதிகளிலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களை
ஆதரித்து, இதய தெய்வம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். தந்த வெற்றிச்
சின்னமாம் `இரட்டை இலை' சின்னத்தில் வாக்களித்து அவர்களை மகத்தான
வெற்றிபெறச் செய்தால், மத்தியிலே இந்தியாவை வல்லரசாக்கக் கூடிய வலிமையான
ஆட்சி அமையும்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அங்கம் வகிக்கும் மத்திய
ஆட்சி அமைந்தால், இந்த நாட்டு மக்களுக்கும், உங்களுக்கும் எண்ணற்ற
நன்மைகள் வந்து குவியும். எனவே, மறவாமல், தவறாமல், உங்கள் வாக்குகளை
வீணாக்காமல், அனைவரும் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து, அனைத்திந்திய
அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும்
என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
'அமைதி, வளம், வளர்ச்சி' என்ற பாதையில் இந்தியாவை வழி நடத்திச் செல்ல
ஒரு வாய்ப்பினை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு
நீங்கள் நல்குவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
வளமான வல்லரசு வலிமையான நல்லரசு என்ற நிலையை பாரதம் எய்திட, தரணி
போற்றும் தன்னிகரில்லா மாநிலம் என்ற பெருமையை தமிழகம் அடைந்திட,
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை
சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று மீண்டும் அன்புடன் கேட்டுக்
கொள்கிறேன்.
வாக்காளப் பெருமக்களே! தேர்தல் பிரச்சாரக் கூட்டம் என்பது வாக்காளப்
பெருமக்களிடத்தில் வேட்பாளரை அறிமுகப்படுத்தி பிரச்சாரம் செய்வதற்காகத்
தான். வாக்காளப் பெருமக்களாகிய நீங்கள் இந்த மேடையில் வித்தியாசமான ஒன்றை
கவனித்து இருப்பீர்கள். நான் தேர்தல் பிரச்சாரம் செய்கின்ற இந்த மேடையில்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும்
வேட்பாளரே இல்லை. இதற்கு என்ன காரணம்? இந்திய தேர்தல் ஆணையத்தின் விந்தையான
விதிமுறைகளும், ஆணைகளும், கட்டுப்பாடுகளும் தான் காரணம்.
கடந்த ஒரு மாத காலமாக நான் மேற்கொண்டுள்ள சறாவளி தேர்தல்
பிரச்சாரத்திற்கு மக்கள் அலை கடலென திரண்டு வருகிறார்கள். மக்கள் வெள்ளம்
நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதனைக் கண்டு எதிர்க்கட்சிகள் கலங்கிப்
போய் இருக்கின்றன. குறிப்பாக தி.மு.க. மிரட்சி அடைந்துள்ளது. விரக்தி
அடைந்துள்ளது. எனவே தான் தி.மு.க_வினர் தற்போது, அனைத்திந்திய அண்ணா
திராவிட முன்னேற்றக் கழகம் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றாலும் ஜெயலலிதா
பிரதமர் ஆக முடியாது என்று சொல்ல ஆரம்பித்துள்ளனர். அதாவது, அனைத்திந்திய
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்பதை
தி.மு.க_வினரே உணரத் தொடங்கிவிட்டனர். கோவை கூட்டத்தில் பேசிய தி.மு.க.
தலைவர் கருணாநிதியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு
வாக்களித்தால் சாபம் இடுவதாக கூறியுள்ளார்.
எங்களைப் பொறுத்தவரையில்
பிரதமர் பதவி என்பதோ, அமைச்சர் பதவி என்பதோ முக்கியமல்ல. தமிழ்நாட்டிற்கு
என்னென்ன திட்டங்களை செயல்படுத்த முடியும் என்பதும், தமிழகத்திற்கு என்ன
நன்மைகள் செய்ய முடியும் என்பதும் தான் எங்களது சிந்தனை.
எனக்கு வரும் கூட்டத்தைக் கண்டு எதிர்க்கட்சிகள் மிரட்சி அடைவதிலோ,
விரக்தி அடைவதிலோ ஆச்சரியப்படுவதற்கு ஏதமில்லை. ஆனால், இங்கு கூடுகிற
கூட்டத்திற்கு தேர்தல் ஆணையம் சில கட்டுப்பாடுகளை விதித்து இருப்பது தான்
எனக்கு வியப்பாக உள்ளது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின்
சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து நான் பிரச்சாரம் செய்யும் போது,
அந்தத் தொகுதி வேட்பாளர் கலந்து கொள்ளக் கூடாது, மேடையில் இருக்கக்
கூடாது, அவரது புகைப்படமும் இருக்கக் கூடாது, வேட்பாளரின் பெயரை கூட நான்
உச்சரிக்ககூடாது, "இத் தொகுதியின் வேட்பாளர் இவர் தான்" என்று கூட நான்
சொல்லக் கூடாது என்றெல்லாம் இதுவரையில் தேர்தல் வரலாற்றிலேயே இல்லாத
அளவுக்கு விந்தையான ஆணைகளை தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ளது.
அவ்வாறு மீறி வேட்பாளருடைய பெயரை நான் உச்சரித்தாலோ, அல்லது அவர்
மேடையில் இருந்தாலோ அல்லது அவரது புகைப்படம் இருந்தாலோ, இந்தக்
கூட்டத்திற்கான அனைத்து செலவையும் தேர்தல் ஆணையம் வேட்பாளர் கணக்கில்
சேர்த்து விடுமாம். வாக்காளப் பெருமக்களாகிய நீங்கள் உங்கள் சொந்த செலவில்
வாகனங்களில் வந்து செல்லும் செலவும் வேட்பாளர் கணக்கில் சேர்க்கப்படும்
என்று தேர்தல் ஆணையம் சொல்லி உள்ளது. இது என்ன நியாயம்? அனைத்திந்திய அண்ணா
திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்த வரையில், என்னைப் பொறுத்த வரையில்,
மேடை அமைப்பு, தோரணங்கள், பதாகைகள், கட்அவுட்டுகள், நாற்காலிகள் போன்ற
செலவுகளை வேட்பாளர் கணக்கில் சேர்ப்பதற்கு எவ்வித ஆட்சேபணையும் இல்லை.
நாங்கள் அதை ஏற்றுக் கொள்கிறோம். ஆனால், கூட்டம் அதிகமாக கூடுகிறது
என்பதைக் காரணம் காட்டி, பொதுமக்கள் தாங்களாகவே ஏற்பாடு செய்து கொண்டு
கூட்டத்திற்கு வரும் செலவைக் கூட வேட்பாளர் கணக்கில் சேர்ப்போம் என்று
சொன்னால் அது எப்படி நியாயமாகும்?
ஒரு மக்களவைத் தொகுதி என்பது ஒரு மாவட்டத்திற்கு இணையானது. நான் ஒரு
மக்களவைத் தொகுதியில் பிரச்சாரம் செய்கிறேன், ஒரு கூட்டத்தில் கலந்து
கொண்டு பேசுகிறேன் என்றால் என்னைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில், எனது
உரையைக் கேட்க வேண்டும் என்ற விருப்பத்தில், அந்தத் தொகுதி முழுவதிலும்
இருந்து பொதுமக்கள் தாங்களாகவே வாகனங்களை ஏற்பாடு செய்து கொண்டு அலை கடலென
திரண்டு வருகிறார்கள். என்னைப் பார்க்க, எனது உரையைக் கேட்க வருகின்ற
மக்கள் கூட்டத்தை நான் எப்படி கட்டுப்படுத்த முடியும்? இதை கழக நிர்வாகிகள்
எப்படி கட்டுப்படுத்துவார்கள்?
குறிப்பிட்ட எண்ணிக்கையில் தான் மக்கள் வர வேண்டும், அதற்கு மேல் வரக்
கூடாது என்று நான் சொல்ல முடியுமா? எப்படி சொல்ல முடியும்? எப்படி தடுக்க
முடியும்? இது எங்களால் இயலாத காரியம். மக்கள் ஆர்வத்திற்கு அணை போட
முடியாது. இவற்றையெல்லாம் புரிந்து கொள்ளாமல் இந்தியத் தேர்தல் ஆணையம்
கட்டுப்பாடுகளை விதிப்பது மக்களுக்கு எதிரான செயல். ஜனநாயகத்திற்கு எதிரான
செயல்.
ரத்தினச் சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், மக்கள் தாங்களாகவே தங்கள்
சொந்தச் செலவில் வாகனங்களில் எனது கூட்டத்திற்கு வரும் செலவு வேட்பாளர்
கணக்கில் சேர்க்கப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதால்,
நான் பேசும் கூட்டத்தில் எனது கட்சியின் வேட்பாளர் கலந்து கொள்ள முடியாத
சழ்நிலை ஏற்பட்டுள்ளது. எங்களது வேட்பாளர் மேடையில் நிற்க முடியாத
சழ்நிலையை, கூட்டத்திற்கு வர முடியாத சழ்நிலையை, வேட்பாளரின்
புகைப்படத்தைக் கூட ஒட்ட முடியாத சூழ்நிலையை, வேட்பாளர் பெயரைக் கூட
உச்சரிக்க முடியாத சழ்நிலையை இந்திய தேர்தல் ஆணையம் உருவாக்கி விட்டது.
தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி முதலில் இரவு பத்து மணிக்கு மேல்
வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்யலாம் என்று அறிவித்ததாக செய்தி வந்தது.
தற்போது இரவு 10 மணிக்கு பிறகு வீடுகளில் உள்ள வாக்காளர்கள் விரும்பினால்
மட்டுமே அவர்களின் வீடுகளுக்கு சென்று வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சாரத்தில்
<டுபட முடியும் என்றும், கதவைத் தட்டி பிரச்சாரம் செய்தால்,
பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளதாக செய்தி
வந்துள்ளது. தேர்தல் ஆணையத்திற்கு ஏன் இவ்வளவு குழப்பம்? இது போன்று, தினம்
தினம் புதிய அறிவிப்புகளை தேர்தல் ஆணையம் வெளியிடுவதால் அரசியல்வாதிகளும்
குழம்பிப் போய் இருக்கிறார்கள். மக்களும் குழம்பிப் போய் இருக்கிறார்கள்.
தெளிவான எழுத்துப்பூர்வமான விளக்கத்தை தேர்தல் ஆணையம் அளிக்கலாமே!
மக்கள் விரும்பினால் பிரச்சாரம் செய்யலாம் என்றும், கதவைத் தட்டினால்
புகார் அளிக்கலாம் என்றும் சொன்னால், அது எப்படி என்று யாருக்கும்
புரியவில்லை. வீட்டின் கதவைத் தட்டிக் கேட்டால் தானே மக்கள் அதை
விரும்புகிறார்களா, இல்லையா என்பது தெரியும்? என்னதான் செய்ய வேண்டும்
என்பதை தேர்தல் ஆணையம் தான் தெளிவாக மக்களுக்கு விளக்க வேண்டும்.
வாக்காளப் பெருமக்களே! மறவாதீர்! வருகின்ற 24.4.2014 அன்று நடைபெற உள்ள
மக்களவைப் பொதுத் தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்
கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு, இதய தெய்வம் புரட்சித்
தலைவர் எம்.ஜி.ஆர் தந்த வெற்றிச் சின்னமாம் இரட்டை இலை சின்னத்தில்
வாக்களித்து அவர்களை மகத்தான வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று உங்கள்
அனைவரையும் அன்புடன் வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்கள் உங்களுடனேயே
இருப்பார்கள், உங்களையே சுற்றிச் சுற்றி வருவார்கள். உங்கள் தேவைகள் என்ன
என்பதைக் கேட்டறிந்து அவற்றை நிறைவேற்றித் தரப் பாடுபடுவார்கள் என்ற
உத்தரவாதத்தை நான் உங்களுக்கு அளிக்கிறேன்.
உங்கள் வாக்கை தமிழகத்தின் நலனுக்காகவும், தமிழர்களின் நலனுக்காகவும்
பயன்படுத்துங்கள். இந்தியத் திருநாட்டை காப்பாற்றுங்கள் என்று
உங்களையெல்லாம் அன்புடன் கேட்டுக் கொண்டு அச்சம் என்பது மடமையடாஅஞ்சாமை
திராவிடர் உடமையடா ஆறிலும் சாவு நூறிலும் சாவு தாயகம் காப்பது கடமையடா என்ற
புரட்சித் தலைவர் ஆழுசு_ன் பாடல் வரிகளை நினைவுபடுத்தி அண்ணா நாமம் வாழ்க!
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நாமம் வாழ்க! என்று கூறி விடை பெறுகிறேன்.
நன்றி வணக்கம்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பேசினார்.
.jpg)
No comments:
Post a Comment