Pages

Wednesday, April 9, 2014

தடைசெய்த 422 புலம்பெயர் எல்.ரி.ரி.ஈ தமிழர்களில் 32 பேர் இந்தியாவில்!

Wednesday, April 09, 2014
இலங்கை::இலங்கை அரசாங்கம் இங்கு வருவதற்கு தடை செய்த 422 புலம்பெயர்ந்த தமிழர்களில் 32 பேர் இந்தியாவில் இருப்பதாக அறிவிக்கப்படுகிறது. இவர்கள் தடை செய்யப்பட்ட எல்.ரி.ரி.ஈ. அமைப்பின் அங்கத்தவர்களும், ஆதரவாளர்களும் என்று அறிவிக்கப்படுகிறது.

கடந்த வாரம் இலங்கை அரசாங்கம் இவர்களுடன் மேலும் 15 தமிழ் புலம்பெயர்ந்த அமைப்புகளையும் தடை செய்திருந்தது. இவ்விதம் தடை விதிக்கப்பட்டவர்களின் சொத்துக்கள் இலங்கையில் முடக்கப்பட்டிருப்பதுடன் 

இலங்கைக்கு வருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதம் 21ம் திகதியன்று அரசாங்கம் வெளியிட்ட வர்த்தமானியில் இந்த விபரங்கள் அறிவிக்கப்பட்டிருந்தன. இந்த வர்த்தமானியில் 6 பேர் மட்டுமே இந்தியாவில் இருப்பதாக அறிவிக்கப்பட்டி ருந்தது. இவ்விதம் தடை செய்தவர்கள் அவுஸ்திரேலியா,

பெல்ஜியம், கனடா, டென்மார்க், பின்லன்ட், பிரான்ஸ், ஜேர்மனி, மலேசியா, நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, தாய்லாந்து மற்றும் பிரிட்டனிலும் தற்போது இருப்பதாக அறிவிக்கப்படுகிறது.

இலங்கையிலும் சிலர் இருப்பதாக அறிவிக்கப்பட்டிருப்பதை அடுத்து அவர்களை உடனடியாக கைது செய்யுமாறும் உத்தரவு பிறப்பிக்கப் பட்டிருக்கிறது.

No comments:

Post a Comment