Saturday, April 05, 2014
சென்னை::தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று பிற்பகல் 3 மணியுடன் நிறைவடைந்தது. தமிழகம் (39 தொகுதிகள்), புதுச்சேரியில் (1 தொகுதி) ஏப்ரல் 24-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 29-ம் தேதி தொடங்கியது. மனு தாக்கலுக்கு இன்று கடைசி நாளான இன்று பிற்பகல் 3 மணி வரை வேட்பு மனுக்கள் பெறப்பட்டன.
இறுதி நாளான இன்று திமுக சார்பில் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன், வேட்புமனு தாக்கல் செய்தார். தருமபுரி தொகுதியில் பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் வேட்புமனு தாக்கல் செய்தார்.
கடைசி நேர அறிவிப்பு:
காங்கிரஸ் கட்சி, தென்சென்னை வேட்பாளரை கடைசி நேரத்தில் அறிவித்துள்ளது. தென் சென்னையில், ரமணி போட்டியிடுவார் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பி.எஸ். ஞானதேசிகன் அறிவித்துள்ளார். இத்துடன் தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கும் காங்கிரஸ் வேட்பாளர்களை அறிவித்துள்ளது.இதே போல், ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் நாஞ்சில் வி.ஈஸ்வர பிரசாத் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை மறுநாள் பரிசீலனை:
இதையடுத்து மனுக்கள் மீதான பரிசீலனை வரும் 7-ம் தேதி ( நாளை மறுநாள்) நடக்கிறது. மனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் 9-ம் தேதி ஆகும். அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

No comments:
Post a Comment