Saturday, April 05, 2014
இலங்கை::புலிகளின் தற்கொலைத் தாக்குதலில் மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா உள்ளிட்ட 29 பேர் கொலையுண்டமை தொடர்பான வழக்கில் எதிரிகள் இருவரையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
அனுராதபுரம் பிரதான நீதிவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமான ருவன்திகா மாரப்பன இந்த உத்தரவை வழங்கினார். 2008 ஒக்டோபர் 6 ஆம் திகதி அனுராதபுரம் பகுதியில் வைத்து மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா உள்ளிட்ட 29 பேர் தற்கொலைத் தாக்குதலில் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பில் ஐவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது. எனினும் போதுமான சாட்சிகள் இல்லாததால் மூவரை வழக்கில் இருந்து விடுவித்து முன்னதாக உத்தரவிடப்பட்டிருந்தது. எஞ்சிய இருவரும் அனுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, வழக்கு விசாரணைக்காக நியமிக்கப்பட்டிருந்த வட மத்திய மாகாண முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி சுனந்த குமார திஸாநாயக்க வருகை தராததால் இருவரும் அனுராதபுரம் பிரதான நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் இருவரையும் அடுத்த மாதம் 10 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.

No comments:
Post a Comment