Pages

Friday, April 18, 2014

உள்ளூராட்சி மன்றங்களுக்கான எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கை அமைச்சர் அதாஉல்லாவிடம் கையளிப்பு!

Atha
Friday, April 18, 2014
இலங்கை::உள்ளூராட்சி மன்றங்களுக்கான வட்டாரங்களை உருவாக்குவதற்காக நியமிக்கப்பட்ட எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கை கையளிப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லாவிடம் எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவரினால் கையளிக்கப்பட்டுள்ளது.
 
இதனையடுத்து குறித்த அறிக்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லாவினால் விரைவில் கையளிக்கப்படவுள்ளது.
 
இதன் காரணமாக எதிர்காலத்தில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் வட்டார அடிப்படையில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment