Pages

Friday, April 18, 2014

அமைச்சர் ரிசாத் பதியுதீனின் விஷேட ஊடக மாநாடு!

Rizadd
Rizad1
Rizad
Friday, April 18, 2014
இலங்கை::வில்பத்து வனப பிரதேசத்தில் ஜாஸ்மின் சிட்டி என்ற பெயரில் வீடமைப்புத திட்டம் ஒன்று மேற்கொள்ளப்படுவதாக பொதுபலசேனா அப்பட்டமான பொய்யினை மக்கள் மத்தியில் கூறிவருகின்றது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீன் குறிப்பிட்டார்.

கொழும்பில் தனது அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இம்மகாநாட்டில் பெருந்தொகையான ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.புதுவருட விடுமுறையையடுத்து எதிர்வரும் 21ஆம் திகதி நீதிமன்றங்கள் மீள திறந்தவுடன் பொதுபலசேனாவின் செயலாளர் ஞாணசார தேரருக்கு எதிராக 500 மில்லியன் ருபா நஸ்ட ஈடு கோரி எனது வழக்கினை எனது சட்டத்தரணிகள் ஊடாக தாக்கள் செய்ய உள்ளேன்.
 
கடந்த காலங்களில் வில்பத்து வணவளப் பிரதேசத்தில் நான் முஸ்லீம்களை குடியேற்றி, அரபிக் கொலணி ஆக்குவதாகவும், 22 ஆயிரம் ஹெக்டயர் வில்பத்து காணியில், காட்டினை சுத்தப்படுத்தி முஸ்லீம்களை குடியேற்றியுள்ளதாகவும், என் மீது பொதுபலசேன அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் அபாண்டமான குற்றங்களை சுமத்தி வருகின்றார்.
 
அதனை நிரூபிக்குமாறும், எனது நற்பெயருக்கு அவதூறு விளைவித்தற்காக மான நஸ்ட ஈடு கோரியும் வழக்;கு தாக்கல் ஒன்றை செய்யப்போவதாக நான் ஊடகங்களுக்கு அறிவித்திருந்தேன்.
அதற்காக 14 நாட்கள் காலக்கேடு விடுத்திருந்தேன். அது முடிவடைந்து விட்டது. அவரிடமிருந்து எவ்வித பதிலும் எனக்கு கிடைக்கவில்லை’ என அமைச்சர் றிசாத் பதியுத்தீன் இன்று அவரது அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரவித்தார்.
 
இங்கு சமூகமளித்திருந்த வணவள உதவிப் பணிப்பாளரும், முசளி பிரதேச செயலாளரும் இணைந்து ‘வில்பத்து காட்டுப்பகுதிக்குள் முஸ்லீம்கள் குடியேறவில்லை. ஆனால், அதனை அண்டிய பகுதிகளில் 45 குடும்பங்கள் ஓலைக் குடிசையமைத்து வாழ்கின்றனர். அவர்களது காணி, வீடுகளை கடற்படை முகாமிட்டுருப்பதால் இம் மக்கள் மீளக் குடியேர முடியாமல் உள்ளனர்’ என தெரிவித்தனர்.
இம் மாநாட்டில் வண்னி பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாருக், வட மாகாணசபை உறுப்பினர்கள், மரிச்சுக்கட்டு முசலி பிரதேச சபைத் தலைவர் மற்றும் உறுப்பினர்களும் சமூகமளித்திருந்தனர்.
 
முசலி பிரதேச செயலாளர் எஸ்.கேதீஸ்வரன், வனவள திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர், மன்னார் பிரதேச நில அளவையாளர்களும் அங்கு சமூகம் தந்திருந்தனர்.
இங்கு தொடர்ந்து அமைச்சர் றிசாத் தகவல் தருகையில்,
இந்த வில்பத்து வணவள பிரதேசத்தில் எவ்வித கட்டுமானங்களும் நிர்மாணிக்கப்படவில்லை. அதற்கு
 
வெளியே 72 குடும்பங்கள் ஓலையினால் குடிசைகள் அமைத்து வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களது 600 ஏக்கர் நிலத்தினை யுத்த காலத்தில் கடற்படை அவர்களது முகாம்களுக்காக எடுத்துக்கொண்டதால், அவர்கள் மீளக் குடியேற முடியாமல் உள்ளனர்.
மேலும் மறிச்சுக்கட்டு 300 வீடுகளைக் கொண்டதாரு ஜெசிம் சிட்டி வீடமைப்புத் திட்டம் 20 மட்டுமே நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இப் பிரதேசம் வனவளப் திணைக்களத்தினால் அரசாங்க அனுமதியுடன் விடுவிக்கப்பட்ட பிரதேசமாகும்.
 
இவர்களுக்கு இக் காணிக்கான உறுதியும் உண்டு. அரசினால் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு மட்டுமே இவ்வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்பட்டவையாகும்.
ஆனால், வடக்கில் 1990களில் இடம்பெயர்ந்த 20 ஆயிரம் முஸ்லீம் மக்களை, மீளக்குடியமர்த்த வேண்டியுள்ளது. 15 ஆயிரம் மக்கள் மீளக்குடியமர்வதற்கு உரிய காணி, அடிப்படை வசதிகள் இன்றி, இன்று மீண்டும் புத்தளத்திலேயே வாழ்ந்து வருகின்றனர்.
 
20 வருட காலமாக அவர்கள் விட்டுச் சென்ற வீடுகள், பள்ளிவாசல்கள், பாடசாலைகள் அனைத்தும் அழிக்கப்பட்டு உள்ளன.
 
நான் 2009ஆம் ஆண்டில் மீள்குடியேற்ற அமைச்சராக இருந்த காலத்தில், 300,000 தமிழ் மக்கள் முகாம்களில் வாழ்ந்து வந்தனர். அவர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் அவர்கள் வாழ்ந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்பட்டனர்.
 
ஆனால் முஸ்லீம்கள் அவ்வாறு இல்லை. 20 வருடங்களுக்குப் பிறகு அவர்கள் மீள குடிபெயருவதென்றால் அவர்கள் காடுகளை வெளிசாக்குவதற்கு அவர்களது வீடுகளை மீள நிர்மானிப்பதற்கு சம்பந்தப்பட்ட அரச திணைக்களங்களிடம் அனுமதி பெறல் வேண்டும்.
இதற்கு மேலதிகமாக இந்த பொதுபலசேனா தேரர் எமது புனித அல்குர்ஆனையும் விமர்சித்து, அந்த குர்ஆனில் நிலங்களை அபகரிப்பது, அத்துடன் ஏமாற்றுவது எமது குர்ஆணில் உள்ள வசனங்கள் எனவும், ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார்.
 
இதற்காகவும் இவருக்கு எதிராக கொம்பனி வீதி பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதற்காக முஸ்லீம்கள் பாரிய அளவில் தமது எதிர்ப்பை தெரிவிப்பார்கள். அத்துடன் அதற்கு எதிராக வழக்கும் தாக்கல் செய்யப்படும்’ எனவும் அமைச்சர் றிசாத் தெரிவித்தார்.

No comments:

Post a Comment