Pages

Friday, April 18, 2014

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆறாவது ஐஸ் உற்பத்தி தொழிற்சாலை திறப்பு!

Friday, April 18, 2014
இலங்கை::கடற்றொழில் தேசிய உற்பத்தியில் கிழக்கு மாகாணம் நேற்று  23 வீதமான உற்பத்தியினை வழங்குகின்றது’ என அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
 
மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழைச்சேனையில் ஆறாவது ஐஸ் உற்பத்தி தொழிற்சாலையை நேற்று (16) காலை கடற்றொழில் நீரியல் வளத்துரை அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன ஆரம்பித்து வைத்தார்.
 
கூள் மேன் ஐஸ் உற்பத்திச்சாலை அறுபது (60) மில்லியன் ரூபா முதலீட்டில் தனியார் நிறுவனத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
 
அதில் நாள் ஒன்றுக்கு முப்பத்தைந்து (35) மெட்ரிக் தொன் ஐஸ் உற்பத்தி செய்யப்படுவதுடன், 300 மெட்ரிக் தொன் ஐஸினை சேமித்து வைக்கக் கூடிய சேமிப்பு களஞ்சியமும் அமைக்கப்பட்டுள்ளது.
 
இந் நிகழ்வில் ஐஸ் தொழிற்சாலையின் உரிமையாளர் ஆசிரி பெரேரா, கடற்றொலில் நீரியல் வளத்துறை அமைச்சின் செயலாளர் டாக்டர் திசாநாயக்க, மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் திணைக்கள உதவிப் பணிப்பாளர் டொமின்கோ ஜோர்ஜ், வாழைச்சேனை மீன் பிடித் துறைமுக முகாமையாளர் எஸ்.எஸ்.ஹெட்டிஹே, வாழைச்சேனை பிரதேச சபை செயலாளர் எஸ்.எம்.சிஹாப்தீன், மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் சம்மேளத் தலைவர் ஏ.சி.எம்.முனவ்வர் மற்றும் மதத் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment