Friday, April 18, 2014
இலங்கை::யாழ் மாவட்டத்தில் நவீன தொழில் நுட்பத்துடன் கூடியதான வகையில் விவசாயத்தை மேம்படுத்தும் பொருட்டு யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்திருந்த குழுவினரை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடமாகாண ஆளுனர் ஜீ.ஏ. சந்திரசிறி ஆகியோர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
திருநெல்வேலியில் அமைந்துள்ள விவசாய திணைக்களப் பணிமனையில் மேற்படி சந்திப்பு நேற்று இடம்பெற்றுள்ளது.
பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவும், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் விவசாயபீடமும், வடமாகாண விவசாய அமைச்சும் இணைந்து யாழ் மாவட்டத்தில் நவீன தொழில் நுட்பத்துடன் கூடியதான வகையில் புதிய வகை இனங்களை அறிமுகப்படுத்தி விவசாய செய்கைகைய மேம்படுத்துவதும் விவசாயிகளுக்கு புதிய தொழில் நுட்பங்களை கையாளுவது தொடர்பிலான அறிவுரைகளையும் வழங்கும் பொருட்டு கொழும்பிலிருந்து குழுவொன்று வருகைதந்திருந்தது.
இன்றையதினம் விவசாயிகளுக்கு செயலமர்வுகளை நடாத்தியிருந்த குழுவினர் நாளையதினம் விவசாயிகளின் பயிர்செய் நிலங்களுக்கும் நேரடியாக விஜயம் மேற்கொண்டு ஆராயவுள்ளனர்.
பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சனிகா ஹரிம்புரகம தலைமையிலான இக்குழுவில் தென்கிழக்கு பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பலரும் பங்கெடுத்துள்ளனர்.
இதன்போது வடமாகாண பிரதம செயலாளர் திருமதி விஜயலட்சுமி ரமேஸ், வடமாகாண ஆளுனரின் செயலாளர் இளங்கோவன், யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் செல்வி வசந்தி அரசரட்ணம், யாழ் பல்கலைக்கழக விவசாய பீடாதிபதி திருமதி சிவச்சந்திரன், கலாநிதி மிகுந்தன், மாகாண விவசாய பணிப்பாளர் சிவகுமார் உள்ளிட்ட துறைசார்ந்தோர் கலந்து கொண்டார்.

No comments:
Post a Comment