Saturday, April 12, 2014
இலங்கை::உலக சமாதான அமைப்பின் (OWP) சர்வதேச மாநாடும் சமாதானத் தூதுவர்கள் நியமனமும் சமாதான விருது வழங்கும் வைபவமும் வியாழக்கிழமை கொழும்பு கலதாரி ஹோட்டலில் நடைபெற்றது.
டென்மார்க் நாட்டை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் உலக சமாதான அமைப்பின் தலைவர் ஆபித் அலி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
டென்மார்க் நாட்டை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் உலக சமாதான அமைப்பின் தலைவர் ஆபித் அலி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
அத்துடன் நீதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் இந்நிகழ்வில் கௌரவ அதிதியாக கலந்து கொண்டு பிரதான சிறப்புரையை நிகழ்த்தினார்.
இதன்போது கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சபையின் முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவருமான ஏ.எம்.ஜெமீல் உலக சமாதான அமைப்பின் இலங்கைக்கான தூதுவராகவும் மாலைதீவு நாடாளுமன்ற பிரதி சபாநாயகர் அஹமட் நஸீம் மாலைதீவுக்கான சமாதானத் தூதுவராகவும் உத்தியோகபூர்வமாக நியமனம் செய்யப்பட்டனர்.
அத்துடன் அமைச்சர்களான பஷில் ராஜபக்ஷ, ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கு நெல்சன் மண்டேலா சமாதான் விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
அதேவேளை உலகளாவிய ரீதியில் இன ஐக்கியத்திற்காகவும் சமாதானத்திற்காகவும் அரும்பணியாற்றி வருகின்ற மூவின சமூகத்தையும் சேர்ந்த அரசியல் தலைவர்கள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் என சர்வதேச புகழ்பெற்ற ஐந்து அதிமுக்கிய பிரமுகர்கள் இதன்போது விசேட சமாதான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
அமைச்சர் ராஜித சேனாரட்ன, இலங்கை சமாதானப் பேரவையின் பணிப்பாளர் ஜொஹான் பெரேரா, தென்கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் வேந்தர் ஜெஸீமா இஸ்மாயில், கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீட பீடாதிபதி வி.ரி.தமிழ்மாறன், ஜனநாயக பேரவையின் பணிப்பாளர் புஞ்சிஹேவா ஆகியோரே இந்நிகழ்வில் சமாதான விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட பிரமுகர்களாவர்.
இந்நிகழ்வில் அமைச்சர் பஷீர் சேகுதாவூத், கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ரி.ஹசன் அலி, பைசால் காசிம், எம்.எஸ்.எம்.தௌபீக், எம்.எஸ்.எம்.அஸ்லம், கிழக்கு மாகாண அமைச்சர் நஸீர் அஹமட், கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி எம்.நிசாம் காரியப்பர் உட்பட மற்றும் பல அரசியல் பிரமுகர்களும் வெளிநாட்டுத் தூதுவர்களும் சிவில் சமூக அமைப்புகள் மற்றும் நிறுவனங்களின் தலைவர்களும் கல்விமான்கள், புத்திஜீவிகளும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment