Pages

Saturday, April 12, 2014

போதைப் பொருள் பாவனையைக் கட்டுப்படுத்த தகவல்களை வழங்க 1984 விசேட இலக்கம்!

Saturday, April 12, 2014
இலங்கை::போதைப் பொருள் பாவனையைக் கட்டுப்படுத்த விசேட வேலைத் திட்டத்தை அமுலாக்குவதற்கு புலனா ய்வுத் தகவல் நிலையமும் அமைக்கப் பட்டுள்ளது. 1984 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு இதுபற்றிய தகவல்களை தெரிவிக்க லாம். தகவல்கள் இரகசியமாகப் பேணப்படும்.
மதுவுக்கு முற்றுப்புள்ளி” கோட்பாட்டை யதார்த்தமாக்கும் வேலைத்திட்டத்தின் மற்றுமொரு அங்கமாக சட்டவிரோத போதைப்பொருள், புகையிலை, மதுபான, கைத்தொழில் புலனாய்வு தகவல் நிலையம் நேற்று ஆரம்பிக்கப்பட்டது.
அபாயகரமான ஔடதங்கள் கட்டுப்பாட்டு தேசிய சபையின் 30 வது கொண்டாட்டம் நேற்றாகும். புதிய நிலையம் இராஜகிரியில் அபாயரகமான ஔடதங்கள் கட்டுப்பாட்டு தேசிய சபையில் அமைந்துள்ளது.
போதைப் பொருள் வர்த்தகம் தொடர்பான தகவல்களை திரட்டல், ஆய்வு செய்தல், மீளாய்வு, பரிமாற்றம் போன்றவை இதன் மூலம் மேற்கொள்ளப்படும்.
1984 என்ற தொலைபேசி இலக்கம் ஊடாக போதைப்பொருள் பாவனை தொடர்பான தகவல்களை எவரும் அறிக்கலாம். இத் தகவலை அறிவிப்போரின் இரகசியம் பாதுகாக்கப்படுமென நிலையத்தின் திறப்பு விழாவின் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது.
அபாயகரமான ஔடதங்கள் கட்டுப் பாட்டு தேசிய சபையின் தலைவி லேஷா டி சில்வா சந்திரசேன உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment