Pages

Tuesday, April 22, 2014

தென் கொரிய படகி விபத்து: பலி எண்ணிக்கை 58-ஆக உயர்வு!

Tuesday, April 22, 2014
மொக்போ::தென் கொரியாவில் நேரிட்ட படகு விபத்தில் பலி எண்ணிக்கை 58-ஆக உயர்ந்துள்ளது.
 
நீச்சல் வீரர்கள் கப்பலின் அடித்தளப் பகுதிக்கு சென்றப் போதும் போதிய வெளிச்சமின்மை மற்றும் அதிக நீரோட்டம் ஆகியவற்றின் காரணமாக உடல்களை மீட்பதில் சிறமம் ஏற்பட்டுள்ளது. தென்கொரியாவின் ஆன்சன் பகுதியில் உள்ள டான்வோன் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 323 மாணவர்கள் ஜேஜு தீவுக்கு ஒரு படகில் விடுமுறை சுற்றுலாச் சென்றபோது தி செவோல் பகுதியில் அந்தப் படகு கவிழ்ந்தது. அதைத் தொடர்ந்து 179 பேர் உயிருடனும், 29 பேர் சடலமாகவும் மீட்கப்பட்டனர்.
 
இந்த நிலையில் கடலோர பாதுகாப்புத் துறை அதிகாரி கோ மையுங்-சியோக் கூறுகையில், இது வறை 58 பேர் உயிரிழந்தது உறுதிச் செய்யப்பட்டுள்ளது. 244 பேரின் கதி என்ன வென்று தெரியவில்லை என்றார். இதற்கிடையே படகின் கேப்டன் லீ ஜூன்-சியோக் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். படகுகளில் பயணம் செய்தவர்களை காப்பாற்றுவதற்கான உதவிகளை செய்வதற்கு ஏற்பட்ட தாமதமே பேரிழப்புக்கு காரணம் என்று விபத்தால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் குற்றம் சாட்டினர்.
 
இந்தச் சம்பவத்தை கண்டித்து அதிபர் மாளிகையான புளூ ஹவுஸ் முன் போராட்டம் நடத்த அவர்கள் திட்டமிட்டனர்.அதன்படி சுமார் 200 பேர் ஜிண்டோவில் இருந்து சியோலுக்கு 420 கி.மீ. நெடுந்தொலைவுப் பயணத்தை தொடங்கினர். ஆனால் அவர்களை போலீசார் முன்னதாகவே தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.

No comments:

Post a Comment