Tuesday, April 22, 2014
இலங்கை::புலம்பெயர் புலிகள் ஆதரவு தமிழ் அமைப்புக்கள் மீதான தடை குறித்து வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு விளக்கமளிப்பதற்கு இலங்கை வெளிவிவகார அமைச்சும், பாதுகாப்பு அமைச்சும் தீர்மானித்துள்ளன.
புலிகளுடன் தொடர்புகளைப் பேணியதாகக் கூறி 16 புலம்பெயர் தமிழ் அமைப்புக்களை இலங்கை அரசாங்கம் அண்மையில் தடை செய்திருந்தது. இதனையடுத்து, சர்வதேச ரீதியில் இலங்கை அரசாங்கத்தின் குறித்த முடிவு தொடர்பில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையிலேயே, வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் எதிர்வரும் வியாழக்கிழமை நாட்டிலுள்ள வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் உயர் அதிகாரிகளை சந்தித்து விளக்கமளிக்கவுள்ளார்.

No comments:
Post a Comment