Pages

Tuesday, April 22, 2014

முதல்வர் ஜெயலலிதா இறுதி கட்ட பிரச்சாரம்: மக்கள் உற்சாக வரவேற்ப்பு: ஒரே மேடையில் 41 வேட்பாளர்கள்: முதல்வர் ஜெயலலிதா அறிமுகம்!

Tuesday, April 22, 2014
சென்னை::அதிமுக பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா நேற்று   தமது இறுதிகட்ட தேர்தல் பிரச்சாரத்தை தென்சென்னை மக்களவை தொகுதியில் மேற்கொண்டார். தென்சென்னை மக்களவை தொகுதிக்கு உட்பட்ட வேளச்சேரி, சோழிங்கநல்லூர், சைதாப்பேட்டை, விருகம்பாக்கம், தியாகராய நகர், மயிலாப்பூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளிலும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து 4 இடங்களில் பொதுமக்களிடையே அதிமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரித்து உரையாற்றினார். பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து முதலமைச்சரின் உரை கேட்டு தங்களுடைய ஆதரவை வெளிப்படுத்தினர்.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இம்மாதம் 24ஜந் தேதி நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் நாளை மாலை 6 மணியுடன் முடிவடைகிறது. எனவே தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும், தேசிய தலைவர்களும் தமிழகத்தில் முகாமிட்டு தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

முதல்வர் ஜெயலலிதா கடந்த பிப்ரவரி மாதம் 24ஜம் தேதி தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளுக்கும் அதிமுக வேட்பாளர்களை அறிவித்து, மார்ச் 3ஜந் தேதி தமது சூறாவளி சுற்றுப்பயணத்தை தொடங்கினார்.

3ஜந் தேதி அன்று காஞ்சிபுரத்தில் நடைபெற்ற பிரமாண்ட பிரச்சார பொதுக்கூட்டத்தில் அந்த தொகுதியின் மக்களவை வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து முதல்வர் உரையாற்றினார்.

பின்னர் அதனை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆங்காங்கே உள்ள நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக நடைபெற்ற பிரமாண்ட தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டங்களில் பங்கேற்று வாக்கு சேகரித்தார். ஒவ்வொரு தொகுதியிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து முதலமைச்சரின் உரை கேட்டு தங்களுடைய ஆதரவை வெளிப்படுத்தினர்.

தமிழகத்தில் அதிமுக அரசு செயல்படுத்திய மக்கள்நலத்திட்டங்களை பட்டியலிட்டும், மத்தியில் ஆட்சி நடத்திவரும் காங்கிரஸ் தலைமையிலான அரசும், அதில் அங்கம் வகித்த திமுகவும் தமிழகத்துக்கு செய்த துரோகங்கள் குறித்தும் முதல்வர் ஜெயலலிதா மக்களிடம் விரிவாக எடுத்துரைத்து அதிமுகவுக்கு வாக்கு சேகரித்தார்.

மத்தியில் அதிமுக அங்கம் வகிக்கும் அரசு அமைந்தால் தமிழகம் முன்னேறும் என்பது குறித்தும், என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது பற்றியும் முதல்வர் அனைத்து தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்து அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.

தமிழகம் முழுவதும் தமது சூறாவளி சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்ட முதல்வர் ஜெயலலிதா, கடந்த 19ஜந்தேதி  முதல் ஸ்ரீபெரும்புதூர், வடசென்னை, மத்திய சென்னை மக்களவைத் தொகுதிகளிலும் மற்றும் ஆலந்தூர் சட்டமன்ற தொகுதியிலும் வேன் மூலம் பிரச்சாரம் செய்து மக்களை சந்தித்து உரை நிகழ்த்தி வாக்கு சேகரித்தார்.

முதல்வர் ஜெயலலிதா சென்னையில்  19ஜஜந் தேதி  முதல் 3 நாட்கள் வீதி வீதியாக சென்று பிரசாரம்  செய்தார்.19ஜஜந் தேதி  ஒரே நாளில் 7 இடங்களில் பிரசாரம்  செய்தார். நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை வடசென்னை தொகுதி யில் முதல்வர் பிரச்சாரம் செய்தார்.

திருவொற்றியூர் வடிவுடையம்மன்கோயில் தேரடி,மாதவரம் நெடுஞ்சாலை, ஆர்.கே.நகர், திரு.வி.க.நகர், பெரம்பூர், கொளத்தூர் ஆகிய   இடங்களில் பிரச்சாரம் செய்தார்.

நேற்று  தென்சென்னை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெ. ஜெயவர்தனை ஆதரித்து வேளச்சேரி, சோழிங்கநல்லூர், சைதாப்பேட்டை, விருகம்பாக்கம், தியாகராய நகர், மயிலாப்பூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட இடங்களில் உரையாற்றி ஆதரவு திரட்டி  வாக்கு சேகரித்தார்.

நேற்று  மாலை இறுதிக்கட்ட பிரச்சாரத்தை தொடங்கிய முதல்வர் ஜெயலலிதா பெருங்குடி கந்தன்சாவடி காளியம்மன் கோவில்  அருகிலும், சைதாப்பேட்டை சின்ன கடும்பாடியம்மன் கோவில் அருகிலும் விருகம்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட எம்ஜிஆர் நகர் மார்க்கெட் 100 அடி ரோடு பகுதிகளிலும், தியாகராய நகர் பேருந்து நிலையம் அருகிலும் உரையாற்றி அதிமுக வேட்பாளருக்கு திரட்டி  வாக்கு சேகரித்தார்.

ஒரே மேடையில் 41 வேட்பாளர்கள்: முதல்வர் அறிமுகம்!!!!!!!

சென்னை::சென்னை தி.நகர் பஸ் நிலை யம் அருகே நேற்று ஒரே மேடை யில் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 பார்லிமெண்ட் தொகுதி  மற்றும் ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வே ட்பா ளர் ஆகியோரை முதல்வர் ஜெயலலிதா அறிமுகம் செய்து வைத்து பேசினார்.

இதற்காக பஸ் நிலை யம் எதிரே பிரமாண்ட மேடைஅமை க்கப்பட்டிருந்தது. அந்த பகுதி முழுவதும் கொடி தோரணங்கள், இரட்டை இலை மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. முதலமைச்சரை வரவேற்க பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்படிருந்தன.

முதலமைச்சர் ஜெயலலிதா கட ந்த மாத ம் 3ஜந்தே தி அன்று காஞ்சிபுரத்தில் தனது தேர்தல் பிரச்சா ரத்தை துவக்கி தொடர்ந் து ஒவ்வொ ரு தொகுதியாக தேர்தல் பிரச்சா ரம் செய்தார். சென்னையில் கட ந்த 3 நாட்களாக வீதிவீதியாக சென்று பிரச்சாரம் செய்த ஜெயலலிதா , நேற்று மூன்றாவது நாளாக தனது இறுதிகட்ட பிரச்சாரத்தை சென்னை தி.நகரில் நிறைவு செய்தார். இதுவரை 26 நாட்க ள் ஜெயலலிதா பிரச்சாரம் செய்து 39 பார்லிமெண்ட் தொகுதியிலும் , ஆலந்தூர் சட்ட மன்ற தொகுதியிலும் பிரச்சாரத்தை முடித்தார் . நேற்று 27ஜவது நாளாக தெ ன் சென்னை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் ஜெயவர்த்தனை ஆதரித்து வீதி வீதியாக சென்று பிரச்சாரம் செய்தார் .

நேற்று மாலை சோ ழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதியில் கந்த ன்சாவடி காளியம்மன் கோவில் அருகே பிரச்சாரத்தை துவக்கிய அவர், சைதாப்பே ட்டை ஐந்துவிளக்கு, எம்.ஜி.ஆர். நகர் மார்க்கெட் ஆகிய இடங்களில் பிரச்சாரம் செய்து விட்டு தி.நகர் பஸ் நிலையம் வந்தார் . தி.நகர் பஸ் நிலையம் அருகே நேற்று தன து பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.

பஸ் நிலை யம் எதிரே ரோட்டின் ஓரம் பிரமாண்ட மேடை அமை க்கப்பட்டிருந்தது. இந்த மேடை யில் 4 அடுக்குகள் அமை க்கப்பட்டிருந்தன . இதில் 40 பார்லிமெ ண்ட் தொகுதி அ.தி.மு.க. வேட்பா ளர்கள் மற்றும் ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ஆகியோர் வரிசையாக நின்றனர்.
அவர்களை முதல்வர் ஜெயலலிதா அறிமுகப்படுத்தி பேசினார்.

ஒவ்வொரு தொகுதியிலும் முதலமைச்சர் ஜெயலலிதா பிரச்சாரம் செய்தபோது அங்கு லட்சோப லட்சம் மக்கள் திரண்டு வந்தார்கள். மிக பிரமாண்டமாக இந்த தேர்தல் பிரச்சார கூட்டங்கள் நடந்தன . ஒவ்வொ ரு கூட்டத்திலும் சுமார் 45 நிமிட நேரம் ஜெயலலிதா எழுச்சியுரை நிகழ்த்தினார் .
நேற்று தன து இறுதி கட்ட பிரச்சாரத்தின்போது தி.நகர் பஸ் நிலையம் அருகே 41 வே ட்பா ளர்களையும் ஜெயலலிதா அறிமுகப்படுத்தி வைத்தார் . இதற்காக நேற்று அந்தந்த தொகுதி வே ட்பாளர்கள் அனைவரும் சென்னை வந்தனர்.
தி.நகர் பொதுக்கூட்ட மேடை அருகே முதல்வர் வந்ததும் அவருக்கு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மற்றும் வேட்பாளர்கள் பூச்செண்டு அளித்து வரவேற்றனர்.

அவர் கலந்து கொண்ட எல்லா பிரச்சார கூட்டங்களிலும் அ.தி.மு.க. ஆட்சியில் செய்துள்ள சாதனைகள், மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆட்சி செய்த ஊழல்கள், தி.மு.க. செய்த இமாலய ஊழல்கள் போன்றவை குறித்து மக்களிடம் எடுத்துரைத்தார்.

அ.தி.மு.க. அங்கம் பெ றும் ஆட்சி மத்தியில் அமைந்தால் செய்ய இருக்கும் திட்டங்கள் என அனை த்தும் தன து பிரச்சாரத்தில் எடுத்து கூறினார் .
கருணாநிதி செய்த பொய் பிரச்சாரத்துக்கு புள்ளி விவரங்களுடன் ஆதா ரங்களுடன் பட் டியல் போடடு காட் டி பதிலடி கொடுத்தார் . நரேந்திர மோடி கூறிய குற்றச்சாட்டுகளுக்கும் பதிலடி கொடுத்தார் . சென்ற இடமெல்லாம் முதல்வர் ஜெயலலிதா அலை வீசியது. முதலமை ச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி சொல்ல மக்கள் அலை அலை யாக வந்து ஆதரவு தெரிவித்தனர் .

No comments:

Post a Comment