Pages

Tuesday, February 4, 2014

அமெரிக்க தூதரகம் கடமை தவறிச் செயற்பட்டுள்ளது: பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ!

Tuesday, February 04, 2014
இலங்கை::அமெரிக்கத் தூதரகம் கடமை தவறிச் செயற்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார்.
யுத்தத்தின் பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் சரியான முறையில் விளக்கம் அளித்திருந்தால், மனித உரிமை நிலைமைகள் மோசமடைந்துள்ளதாக அமெரிக்க துணை ரஜாங்கச் செயலாளர் நிஷா பிஷ்வால் தெரிவித்திருக்க மாட்டார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த மத்திய தென் ஆசியா பிராந்திய வலயத்திற்கான துணை ராஜாங்கச் செயலாளர் நிஷா பிஷ்வால் இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து அதிருப்தி வெளியிட்டிருந்தார். நிஷா பிஷ்வால் பிழையாக வழிநடத்தப்பட்டுள்ளார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். யுத்த நிறைவின் பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள சாதகமான நிலைமைகளை பிஷ்வால் முற்று முழுதாக உதாசீனம் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்படும் வரையில் வடக்கில் மாகாணசபை நிறுவ முடியாதிருந்தமையை புரிந்து கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டது முதல் வடக்கு வாக்காளர் எண்ணிக்கை பாரியளவில் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அமைதியான முறையில் வடக்கில் தேர்தல் நடத்தப்பட்டு மாகாணசபை நிறுப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார். சிறுபான்மை சமூகத்தின் மீது தாக்குதல் நடத்த வேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கு கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தாக்குதல் நடத்தினால் ஆளும் கட்சிக்கு சிறுபான்மை மக்களின் வாக்குகள் கிடைக்காது, புத்திசாதூரியமான எந்தவொரு அரசியல் தலைவரும் சிறுபான்மை சமூகத்தின் மீது தாக்குதல் நடத்த அனுமதிக்க மாட்டார் என அவர் தெரிவித்துள்ளார். எனவே அமெரிக்காவினால் சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment