Tuesday, February 04, 2014
ராமேசுவரம்::ராமேசுவரத்தை சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து வருவது
வாடிக்கையாக நடந்து வருகிறது. இதனை தடுக்க இரு நாட்டு மீனவர்கள்
பேச்சுவார்த்தை சமீபத்தில் நடைபெற்றது. ஆனால் அதன் பின்னர் சிறைபிடிப்பு
மற்றும் தாக்குதல் சம்பவங்கள் குறைவதற்கு பதில் அதிகரித்தே உள்ளது.
பேச்சுவார்த்தைக்கு மறுநாள் 38 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டனர். 1–ம்
தேதி இரவும் 11 மீனவர்களை இலங்கை கடற்படை சிறை பிடித்தது. இந்த
அதிர்ச்சியில் இருந்து மீனவ குடும்பங்கள் மீள்வதற்குள் இன்று அதிகாலை
கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த 8 மீனவர்களை இலங்கை கடற்படை
சிறைபிடித்து சென்றுள்ளது.
ராமேசுவரத்தை சேர்ந்த கற்புக்கரசி, சேதுராமன் ஆகியோரது படகில் இருந்த மீனவர்கள் பன்னீர், கங்காதரன், குமார், பூப்பிள்ளை, போதிராஜன், குருசாமி, லிங்ஸ்டன், ரகுபதி ஆகியோர் சிறை பிடிக்கப்பட்டு காங்கேசன் துறைமுகம் கொண்டு செல்லப்பட்டனர்.
இதேபோல் புதுக்கோட்டை, நாகப்பட்டிணம் பகுதிகளை சேர்ந்த 6 படகுகள் மற்றும் 22 மீனவர்களும் சிறைபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

No comments:
Post a Comment