Pages

Tuesday, February 4, 2014

இலங்கையின் 66ஆவது சுதந்திரதினம் இன்று: நாட்டின் சமாதானத்தை சீர்குலைக்கும் நோக்கில் ஜெனீவாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது : ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!

Tuesday, February 04, 2014
இலங்கை::நாட்டின் சமாதானத்தை சீர்குலைக்கும் நோக்கில் ஜெனீவாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படுவதன் மூலம் நாட்டுக்கு நன்மைகள் ஏற்படப் போவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

66ம் சுதந்திர தின நிகழ்வுகளில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.தமிழீழ விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களை சர்வதேச சமூகம் மறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளார்.மிகக் கடுமையான சவால்களுக்கு மத்தியிலேயே சுதந்திரம் வென்றெடுக்கப்பட்டது என அவர் சுட்டிக்காடடியுள்ளார்.

இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி உள்ளிட்ட பலரை புலிகள் கொன்றதாகவும், 2009ம் ஆண்டு மே மாதம் முதல் வடக்கு மக்கள் முதல் அனைவரும் சுதந்திரத்தை அனுபவித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.நாட்டு மக்களினால் அனுபவிக்கப்பட்டு வரும் சுதந்திரத்தை எவரும் எடுத்துச் செல்ல இந்த அரசாங்கம் அனுமதிக்காது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக சுமத்தப்பட உள்ள குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என அவர் தெரிவித்துள்ளார்.பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தை பலம்பொருந்திய நாடுகள் புரிந்து கொள்ள வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தள்ளார்.

No comments:

Post a Comment