Pages

Tuesday, February 11, 2014

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் ஜீ.எல். உரையாற்றுவார்!

Tuesday, February 11, 2014
இலங்கை::எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் உரையாற்ற உள்ளார். எதிர்வரும் மார்ச் மாதம் 5ம் திகதி அமைச்சர் பீரிஸ் உரையாற்றுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது, மனித உரிமைப் பேரவையின் 25ம் அமர்வுகள் மார்ச் மாதம் 3ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

ஆரம்ப தினத்தில் பிரித்தானிய மற்றும் கனேடிய வெளிவிவகார அமைச்சர்கள் உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை மற்றும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் ஆகியோரும் ஆரம்ப தினத்தில் உரையாற்றவுள்ளனர்.

அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் உரையாற்ற உள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளின் நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், இலங்கையின் சார்பில் யார் யார் பங்கேற்க உள்ளார்கள், யார் இலங்கைப் பிரதிநிதிகள் குழுவினை வழிநடத்த உள்ளார் என்பது பற்றிய தகவல்கள் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை.

பெரும்பாலும் அமெரிக்கா தலைமையிலான நாடுகள் இலங்கைக்கு எதிராக இம்முறை அமர்வுகளில் தீர்மானம் நிறைவேற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment