Pages

Tuesday, February 11, 2014

புலம்பெயர் மக்கள் நாட்டுக்கு எதிராக செயற்பட ஐ.தே.கவே காரணம்: சில் பிரேமஜயந்த!

Tuesday, February 11, 2014
இலங்கை::புலம்பெயர் மக்கள் நாட்டுக்கு எதிராக செயற்படுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியே காரணம் என அரசாங்கம் அறிவித்துள்ளது.தமிழ் புலம்பெயர் சமூகம் என்ற ஒன்றை உருவாக்கியதே ஐக்கிய தேசியக் கட்சியாகும் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். 1983ம் ஆண்டு தமிழ் மக்கள் மீதான தாக்குதல்களை ஜே.ஆர். ஜயவர்தன தடுத்திருந்தால் புலம்பெயர் தமிழ் சமூகம் உருவாகியிருக்காது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜே.ஆர். ஜயவர்தனவின் அமைச்சரவையில் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும் அங்கம் வகித்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ் மக்கள் மீது தாக்குதல்களை தடுத்து நிறுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தால் தமிழ் மக்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றிருக்க மாட்டார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

டார்லி வீதியில் அமைந்துள்ள, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அரச படையினர் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக புலம் பெயர் தமிழர்கள் குற்றம் சுமத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார். புலம்பெயர் தமிழர்களின் நடவடிக்கைகளுக்கு எதிராக உரிய பிரச்சாரம் செய்யப்படவில்லை என தற்போது ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தி வருவதாகவும், உண்மையில் ஐக்கிய தேசியக் கட்சியே புலம்பெயர் தமிழ் சமூகத்தை உருவாக்கியது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உள்நாட்டு பிரச்சினைகளை ஐக்கிய தேசியக் கட்சி சர்வதேச மயப்படுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார். 2001ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டு வரையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலத்திலேயே சர்வதேச கண்காணிப்பாளர்கள் இலங்கையில் கடமையாற்றினார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment