Tuesday, February 11, 2014
புதுடெல்லி::ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன்
மற்றும் முருகன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்து ஆயுள்
தண்டனையைக் குறைக்கக் கோரும் வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று
வருகிறது. இவர்கள் 3 பேரின் கருணை மனுக்களை பரிசீலிப்பதற்காக, ஜனாதிபதி
அதிக காலம் எடுத்துக் கொண்டதால் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க
வேண்டும் என்று கோரி சுப்ரீம் கோர்ட்டில் ஏற்கனவே மனு தாக்கல் செய்தனர்.
கடந்த 4-ந்தேதியன்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி பி.சதாசிவம் மற்றும் நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், சிவ்கீர்த்தி சிங் ஆகியோர் முன்னிலையான அமர்வில் அரசுத் தரப்பில் அட்வகேட் ஜெனரல் வாகன்வதி தன்னுடைய வாதங்களை முன்வைத்தார். பின்னர் இருதரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. மேலும் எழுத்துபூர்வமான வாதங்களை தாக்கல் செய்யுமாறும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த நிலையில் பேரறிவாளன், சாந்தன் மற்றும் முருகன் ஆகியோர் தரப்பில் எழுத்துபூர்வமான வாதம் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.
அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
உள்துறை அமைச்சகம் எந்தவித காரணமும் இன்றி 3 பேரின் கருணை மனுக்களை பல ஆண்டுகளாக பரிசீலிக்கப்படாமல் முடக்கி வைத்திருந்தது. இது அந்த அமைச்சகத்தின் அலட்சியப் போக்கைக் காட்டுகிறது. இது பெரும் தாமதத்தை ஏற்படுத்தியது என்பதை அரசு வழக்கறிஞரே ஒப்புக் கொண்டார். இதற்கு எந்த விளக்கமும் இல்லை என்றும் அவரே கூறியிருக்கிறார். எனவே இதற்கான பொறுப்பை மத்திய அரசே ஏற்க வேண்டும்.
காலதாமதம் காரணமாக 3 பேரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க அனைத்து முகாந்திரங்களும் உள்ளன. 3 பேரும் சிறையில் தங்கள் வாழ்க்கையை சிரமங்கள் இன்றி, இசை, ஆடல் பாடலுடன் கழித்ததாக கூறுவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் 3 பேரும் பல ஆண்டுகளாக தூக்கு தண்டனையை எதிர்பார்த்து மன உளைச்சலுடன் வாழ்கின்றனர். இது தூக்குத் தண்டனை அனுபவிப்பதை விட கொடுமையானது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பல்வேறு வழக்குகளில் வழங்கப்பட்ட தீர்ப்புகள் குறித்த விவரங்களும் இந்த வாதத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு சார்பில் இன்னும் ஓரிரு நாட்களில் எழுத்துபூர்வமான வாதம் சமர்ப்பிக்கப்படும் என்று தெரிகிறது. இந்த வழக்கின் மீதான தீர்ப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:
Post a Comment