Pages

Wednesday, February 19, 2014

புலிகளுக்கு ஆதரவான சில புலம்பெயர் அமைப்புக்கள் போலிப் பிரச்சாரங்களில்: நியோமல் பெரேரா!

Wednesday, February 19, 2014
இலங்கை::புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் மற்றும் தமிழ் அமைப்புக்களின் தகவல்களின் அடிப்படையில் இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படக் கூடாது என பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேரா தெரிவித்துள்ளார்.

புலிகளுக்கு ஆதரவான சில புலம்பெயர் அமைப்புக்கள் போலிப் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.


ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை வலியுறுத்தப்பட மாட்டாது என எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் அமைப்பு சில நாடுகளின் அரசியல் விளையாட்டு மைதானம் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இறுதி கட்ட யுத்தத்தின் போது 40000 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வருவதாகவும், இந்தக் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

புலிகளின் பிடியில் வடக்கு இருந்த காலத்தில் ஜனநாயகத்திற்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டிருந்ததாகவும் சிவில் நிர்வாக நடவடிக்கைகள் ஸ்தம்பிதம் அடைந்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


அரசாங்கம் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து வடக்கு கிழக்கில் ஜனநாயகத்தை நிலைநாட்டியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment