Pages

Wednesday, February 19, 2014

ஐ.நா. பிரதிநிதிகள் – வடக்கு ஆளுநர் சந்திப்பு!

Wednesday, February 19, 2014
இலங்கை::ஐக்கிய நாடுகள் சபையின் ஆசிய பசுபிக் பிராந்திய அரசியல் திணைக்களத்தின் பணிப்பாளர் மேரி யமாஷித்தா தலைமையிலான குழுவினர் இன்று யாழ்ப்பாணத்திற்கான விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
 
$இலங்கையின் சமகால அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பில் ஆராய்வதற்கான பயணத்தினை மேற்கொண்ட குறித்த குழுவினர், வடக்கு மாகாண ஆளுநர் ஜி.எல். சந்திரசிறியையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தனர். யாழ்ப்பாணத்தில் உள்ள ஆளுநர் இல்லத்தில் நடைபெற்ற குறித்த சந்திப்பில் பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டதாக ஆளுநர் தரப்புத் தகவல்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment