Tuesday, February 4, 2014

சம்மாந்துறை சமூகத்தின் ஏற்பாட்டில் சுதந்திர தின நிகழ்வு!!!

Tuesday, February 04, 2014
இலங்கை::இலங்கையின் 66வது தேசிய சுதந்திர தினத்தையிட்டு சம்மாந்துறை சமூகம் ஏற்பாடு செய்த சுதந்திர தின நிகழ்வு இன்று (04) சம்மாந்துறை ஹிஜ்றா சந்தி பத்ர் ஜூம்ஆப் பள்ளிவாசல் முற்றலிருந்த ஆரம்பித்து நடைபவணியாக சம்மாந்துறை அப்துல் மஜீட் நகர மண்டபத்தை வந்தடைந்ததுடன் அங்கு சுதந்திர தினம் தொடர்பான பல நிகழ்வுகள் நடைபெற்றன.

கெப்சோ நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் ஏ.ஜே.காமீல் இம்டாட் தலைமையில் நடைபெற்ற வைபவத்தில் அதிதிகளாக கிழக்கு மாகாண சுகாதார சுதேச வைத்தியத்துறை அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர், சம்மாந்தறை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷhட,;

உதவி தவிசாளர் எம்.ஏ.கே.றஹ்மான், பிரதேச செயலாளர் எ.மனசூ10ர், வலயக் கல்விப் பணிப்பாளர் யூ.எல்.எம்.ஹாசீம், அம்பாறை மாவாட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சிஷhந்த சந்திரசேகர, பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜயந்த தஹநக்க, உதவிப் பிரதேச செயலாளர் எம்.அப்துல் லத்தீப், கணக்காளர் ஏ.எல்.மஹறூப், பிரதம நம்பிக்கையாளர் டாக்டர் எம்.வை.எம்.முஸ்தபா, ஜனாதிபதி இணைப்பதிகாரி எம்.எம்.ஏ.காதர் சர்வமத தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment