Tuesday, February 4, 2014

கல்குடா தொகுதியில் 66ஆவது சுதந்திரதின நிகழ்வுகள்!

Tuesday, February 04, 2014
இலங்கை::இலங்கையின் 66வது சுதந்திரதினம் இன்று (04) நாடலாவிய ரீதியில் கொண்டாடப்பட்டது. இந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடாத் தொகுதியில் பல்வேறு நிகழ்வுகள் இடம் பெற்றன.
 
இதில் செம்மண்ணோடை சாட்டோ விளையாட்டு கழகம் ஏற்பாடு செய்த நிகழ்வு செம்மண்ணோடை அல்-ஹம்றா வித்தியாலயத்தில் கழகத் தலைவர் வை.எல்.மன்சூர் தலைமையிலும்,
 
வாழைச்சேனை பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த நிகழ்வு பிரதேச செயலாளர் திருமதி ரீ.தினேஸ் தலைமையிலும்,
ஓட்டமாவடி பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த நிகழ்வு பிரதேச செயலாளர் எம்.சி.அன்சார் தலைமையிலும்,
 
வாழைச்சேனை முஹைதீன் ஜும்ஆ பள்ளி வாயல் ஏற்பாடு செய்த நிகழ்வு எச்.எம்.மீராமுஹைதீன் தலைமையிலும்,
பிறைந்துரைச்சேனை சாதுலியா வித்தியாலம் ஏற்பாடு செய்த நிகழ்வு அதிபர் எம்.இஸ்மாயில் தலைமையிலும்,
 
வாழைச்சேனை அல்-ஹக் விளையாட்டுக் கழகம் ஏற்பாடு செய்த நிகழ்வு எம்.அனஸ்தீன் தலைமையிலும்,
 
மாவடிச்சேனை அல் இக்பால் பாடசாலை ஏற்பாடு செய்த நிகழ்வு வித்தியாலய அதிபர் எஸ்.எம்.இஸ்மாயில் தலைமையிலும் இடம் பெற்றது.
இந் நிகழ்வுகளில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கல்குடாத் தொகுதி அமைப்பாளர் எஸ்.ஏ.றபீல், இராணுவத்தின் 231 படைப்பிரிவு பொறுப்பதிகாரி கேணர்னல் சுதந்த திலகரத்ன, வாழைச்சேனை புத்தி ஜயந்தி விகாரையின் விகாராதிபதி பூஜித நாவாநே அபேவன்ச லங்கார தேரர், மௌலவி எம்.ஏ.எம். ரஹ்மத்துல்லாஹ் பலாஹி, வாழைச்சேனை பிரதேச சபை செயலாளர் எஸ்.எம்.சிஹாப்தீன், கலாசார உத்தியோகத்தர் மௌலவி ஏ.எல்.பீர்முஹம்மது உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
 
ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் ஏற்பாடு செய்த சுதந்திர தின நிகழ்வின் போது இருபது முதியவர்களுக்கு குடைகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment