Wednesday, January 08, 2014
இலங்கை::யாழ்ப்பாணத்தில் பாரிய வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள்
என கைது செய்யப்பட்ட ஆவா குறூப்பை சேர்ந்த 13 பேருரையும் எதிர்வரும்
17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்ற
நீதிபதி சிவகுமார் உத்தரவிட்டுள்ளார் .
நேற்றும் நேற்று முன்தினமுமே இவர்கள் 13 பேரும் கோப்பாய் மற்றும் அச்சுவேலி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர் ..
இன்று இரவு யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்ற நீதிபதியின் வீட்டில் அவர் முன்னிலையில் ஆவா குறூப்பை சேர்ந்த 13 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர் .
அதனையடுத்து அவர்கள் அனைவரையும் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார் .
மேலும் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற வாள் வெட்டு சம்பவங்களுடன் நெருங்கிய
தொடர்பு உண்டு என்றும் அவர்கள் பயன்படுத்திய வாள்கள் மற்றும் மோட்டார்
சைக்கிள் என்பனவும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .
No comments:
Post a Comment