Pages

Wednesday, January 8, 2014

இலங்கை தொடர்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக, அமெரிக்க யுத்தக் குற்றச் செயல் தொடர்பான பிரதிநிதி ஸ்டீவன் ரெப் தெரிவித்துள்ளார்!

Wednesday, January 08, 2014
இலங்கை::ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கை தொடர்பில் அமெரிக்கா தீர்மானம் நிறைவேற்ற உள்ளது. ஏற்கனவே கடந்த இரண்டு தடவைகள் இலங்கைக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது,
 
எதிர்வரும் மார்ச் மாதம் சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகள் நடைபெறவுள்ளது.

இந்த அமர்வுகளின் போது இலங்கை தொடர்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக, அமெரிக்க யுத்தக் குற்றச் செயல் தொடர்பான பிரதிநிதி ஸ்டீவன் ரெப் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சுயாதீன சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென அமெரிக்கா தீர்மானம் நிறைவேற்றும் என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.இதேவேளை, இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் முனைப்புக்களில் பிரித்தானியாவும் சிரத்தை காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 
 

No comments:

Post a Comment