Pages

Sunday, January 5, 2014

பொங்கல் பரிசு வழங்கும் திட்டம்: முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார்!

Sunday, 05, January, 2014
சென்னை::பொங்கல் திருநாளை முன்னிட்டு பொது மக்களுக்கு வழங்க உள்ள பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் விலையில்லா வேட்டி சேலை வழங்கும் திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா நேற்று தொடங்கி வைத்தார். 
பொங்கல் திருநாளையொட்டி ரேஷன் கடைகளில் அரிசி குடும்ப அட்டை உள்ளவர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரையுடன் ரொக்கமாக 100 ரூபாயும் வழங்கப்படும் என்று முதலமைச்சர்  ஜெயலலிதா அறிவித்தார்.
இந்த சிறப்பு பொங்கல் பரிசு ஒரு கோடியே 84 லட்சம்  குடும்ப அட்டை தாரர்களுக்கு கிடைக்கும். பொங்கல் பரிசுத் தொகுப்பு பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
அதே போல ஒவ்வொரு ஆண்டும் ஏழை _எளிய மக்களுக்கு அரசு சார்பில் இலவச வேட்டி_ சேலை வழங்கப்படுகிறது. விலையில்லா வேட்டி_ சேலையும் பொங்கலுக்கு முன்னதாக வழங்கப்படும்.விலையில்லா வேட்டி_ சேலை திட்டத்தின் மூலம் பல லட்சம் ஏழை குடும்பங்கள் பயன் பெற்று வருகின்றனர்.
சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் விலையில்லா வேட்டி_ சேலை வழங்கும் திட்டங்களின் தொடக்க விழா நீலகிரி மாவட்டம் குன்னுனூரில் உள்ள வளனார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில்  நேற்றுமாலை நடைபெற்றது. முதலமைச்சர் ஜெயலலிதா திட்டத்தை தொடங்கி வைத்தார்.
மேலும் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியதுடன் முடிவுற்ற பணிகளையும் தொடங்கி வைத்து, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி விழாவில் பேருரையாற்றினார்.
விழாவில் தலைமை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் வரவேற்பு நிகழ்த்தினார். முன்னதாக தலைமை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணனும், நீலகிரி மாவட்ட கலெக்டர் பொ.சங்கரும் முதல்வருக்கு பூங்கொத்து அளித்து வரவேற்றனர். 
விழாவில் வரவேற்புரை முடிந்ததும் வருவாய்த் துறை பி.வி. ரமணா வாழ்த்துரை வழங்கினார். கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜு, உணவுத் துறை அமைச்சர் காமராஜ்,  கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் டாக்டர்  எஸ். சுந்தரராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். 

No comments:

Post a Comment