Pages

Saturday, January 4, 2014

இராணுவம் தமக்கு எதிரானவர்களுடன் தான் போரிட்டனர். ஆனால் சில தமிழ் மக்கள் இராணுவம் தமக்கெதிராக போராடியதாகவே நினைக்கின்றனர்: மகிந்த ஹத்துருசிங்க!

Saturday, January 4, 2014
இலங்கை::
மீண்டும் யுத்த நிலையை ஏற்படுத்திக் கொள்ளாமல் நாட்டின் அபிவிருத்திக்காக உழைப்போம் என யாழ்.மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.
 
யாழ். வசாவிளானில் இன்று நடைபெற்ற தனது பிரிவு உபசார நிகழ்வில் உரையாற்றும் போதே மகிந்த ஹத்துருசிங்க இதனை தெரிவித்தார். யாழில் கடந்த 2009ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் யாழ். கட்டளைத் தளபதியாக கடமையாற்றி வந்த இவர் தற்போது கொழும்பு இராணுவ தலைமையகத்திற்கு மாற்றமாகியுள்ளார்.அதனை முன்னிட்டு நடைபெற்ற பிரிவுஉபசார நிகழ்விலையே அவர் இதனை தெரிவித்தார்.
 
மகிந்த ஹத்துருசிங்க மேலும் தெரிவிக்கையில், இராணுவம் தமக்கு எதிரானவர்களுடன் தான் போரிட்டனர். ஆனால் சில தமிழ் மக்கள் இராணுவம் தமக்கெதிராக போராடியதாகவே நினைக்கின்றனர். ஆனால் தற்போது இராணுவம் பல அபிவிருத்தி வேலைகளை செய்து வருகின்றது. மிதிவெடி அகற்றல், சிறுவர் நல வேலைத்திட்டங்கள், வறியவர்களின் மருத்துவ சிக்கிச்சைக்கு உதவுதல், மாதாந்தம் 200 இராணுவத்தினர் இரத்த தானம் மேற்கொள்ளால் போன்ற சமூக நல வேலைத்திட்டங்களை செய்து வருகின்றது.
2009 க்கு முந்திய காலப்பகுதியில் குற்றங்கள் நிறைந்து காணப்பட்டன.ஆனால் தற்போது நீதி நிர்வாக சேவைகள் தேவையான அளவு முன்னெடுக்கப்பட்டுள்ளன. நாமெல்லாம் ஒரே நாடு ஒரே மக்கள் இந்த நாட்டில் ஒற்றுமையுடன் வாழவேண்டும். கடந்த காலத்தை போல மீண்டுமொரு காலத்தை ஏற்படுத்த கூடாது. தர்க்க ரீதியாக பேசி சாதகமற்ற ரீதியில் செல்லாது நீங்கள் உங்கள் தேவைகளை பெற்று கொள்ள வேண்டும். நாம் ஐக்கியமாக எமது பணியை முன்னெடுப்போம் என மேலும் மகிந்த ஹத்துருசிங்க தெரிவித்தார்.

No comments:

Post a Comment