Wednesday, January 22, 2014

ஆசிய மன்றத்தினருக்கான கௌரவிப்பு நிகழ்வும், புதிய கட்டிடத் திறப்பு விழா!

Wednesday, January 22, 2014
இலங்கை::யாழ். மாநகரசபைக்கு ஆசிய மன்றத்தினால் வழங்கப்பட்ட சேவைகளைப் பாராட்டும் முகமாக அவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு நேற்று 21.01.2014ம் தேதி செவ்வாய்க்கிழமை பி.ப.02.00 மணியளவில், யாழ். மாநகர முதல்வர் திருமதி.யோகேஸ்வரி பற்குணராசா அவர்களின் தலைமையில் முதல்வரின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
 
இந் நிகழ்வில் ஆசிய மன்றத்தின் தவிசாளர் திரு. மைக்கல்.எச்.ஆர்மகோஸ்ட், ஆசிய மன்றத்தின் தலைவர் N.S.டேவிட் அர்னால்ட் மன்றத்தின் உயர்மட்டக் குழுவினர், இலங்கை ஆசிய மன்ற பிரதிநிதிகள், மாநகர ஆணையாளர், மாநகரசபை உறுப்பினர்கள், உத்தியோகஸ்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
 
குறித்த நிகழ்வின்போது, ஆசிய மன்றத்தின் அனுசரணையுடன் யாழ். மாநகர சபையினால் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நவீன வசதிகளுடன் கூடிய திட்டமிடல் பகுதியின் கட்டிடம் ஆசிய மன்றத்தின் தவிசாளர் திரு.மைக்கல். எச்.ஆர்மகோஸ்ட் மற்றும் யாழ். மாநகர முதல்வர் திருமதி. யோகேஸ்வரி பற்குணராசா ஆகியோரினால் நாடா வெட்டி திறந்து வைக்கப்பட்டது.
 
அடுத்து இடம்பெற்ற ஆசிய மன்ற பிரதிநிதிகளுக்கான கௌரவிப்பு நிகழ்வின்போது ஆசிய மன்ற பிரதிநிதிகளுக்கு யாழ். நினைவுச் சின்னங்களை யாழ். மாநகர முதல்வர் அவர்கள் வழங்கி கௌரவித்தமை இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.

No comments:

Post a Comment