Wednesday, January 22, 2014
சென்னை::பாக்.ஜலசந்தியில் மீன் பிடித்துக்கொண்டியிருந்த
ராமநாதபுரத்தை சேர்ந்த 25 மீனவர்கள் நேற்று மீண்டும்
சிறைப்பிடிக்கப்பட்டனர். இவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க
வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதல்வர் ஜெயலலிதா
கடிதம் எழுதியுள்ளார்.
தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லும்போதெல்லாம் அவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி சிறைப்பிடித்து செல்வது தொன்றுதொட்டு நடக்கும் ஒரு நிகழ்ச்சியாகிவிட்டது. இதை கண்டித்து பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதல்வர் ஜெயலலிதா பல கடிதங்கள் எழுதிவிட்டார். ஆனாலும் இலங்கை கடற்படையின் அட்டகாசம் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கிறது. இருந்தாலும் தமிழக_இலங்கை மீனவ பிரதிநிதிகளிடையேயான பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்து வருகிறது. இந்த பேச்சுவார்த்தை சென்னையில் கடந்த 20_ம் தேதி நடப்பதாக இருந்தது. ஆனால் இலங்கையின் வேண்டுகோளை ஏற்று இந்த பேச்சுவார்த்தை வரும் 27_ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா சமீபத்தில் வெளியிட்ட ஒரு அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். நல்லெண்ண நடவடிக்கையாக தமிழகத்தில் உள்ள இலங்கை மீனவர்கள் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு வருகிறார்கள். அதேபோல முதல்வர் ஜெயலலிதாவின் தொடர் நடவடிக்கையால் இதுவரை தமிழகத்தை சேர்ந்த 233 மீனவர்கள் இலங்கை அரசால் இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய கதையாக நேற்று இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியத்தை நிகழ்த்தியுள்ளது. அதாவது பாக். ஜலசந்தியில் மீன்பிடித்துக்கொண்டியிருந்த ராமநாதபுரத்தை சேர்ந்த 25 மீனவர்களை இலங்கை கடற்படை பிடித்துச்சென்றது. அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்தது. இருநாடுகளிடையே பேச்சுவார்த்தை நடைபெற உள்ள நிலையில் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்திருப்பது மீனவர்கள் மத்தியில் ஒரு கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதை தணிக்கும் விதமாக முதல்வர் ஜெயலலிதா, பிரதமருக்கு நேற்று மீண்டும் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் சிறைப்பிடிக்கப்பட்ட 25 மீனவர்களையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களது 69 படகுகளையும் விடுவிக்க வேண்டும். அதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று பிரதமரை முதல்வர் ஜெயலலிதா தனது கடிதத்தில் வலியுறுத்தி கேட்டுக்கொண்டுள்ளார். இதுவரை பிரதமருக்கு மீனவர் பிரச்சினை தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா 33_க்கும் மேற்பட்ட கடிதங்களை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

_1.jpg)
No comments:
Post a Comment