Monday, January 06, 2014
இலங்கை::யாழில் கடற்கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளதால் கரையோரப்பிரதேசத்தில் வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களிற்கு வெளியேறி வருகின்றனர்.
யாழ் மாவட்டத்தில் இன்று அதிகாலை தொடக்கம் கடற்கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது இதனால் கரையோரப்பிரதேசத்தில் வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களிற்கு நகர்ந்து வருகின்றனர்.
குறிப்பாக வடமராட்சி கிழக்கு முதல் கரைநகர் வரையான பிரதேசத்தில் இந்த கடற்கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
வட பகுதிக் கடற்பரப்பில் சீரற்ற காலநிலை ஏற்பட்டுள்ளதால் கடும் மழையுடன் கூடிய காற்று வீசக் கூடும் என்று வானியல் திணைக்களம் அறிவித்துள்ள நிலையில் இன்று காலை தொடக்கம் மக்கள் இடம் பெயர்ந்து வருகின்றனர்.
இதேவேளை கரையோரப் பிரதேசத்தில் இருந்த மீன்பிடி படகுகள் கடலில் இருந்து 25 மீற்றருக்கு அப்பால் அகற்றப்பட்டுள்ளது.
அத்தோடு யாழ்ப்பாணத்தில் கரையோரப்பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடற்கொந்தளிப்பால் பாதுகாப்பாக இருக்குமாறு பொதுமக்களுக்கு பொலிஸார் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதேவேளை முல்லைத்தீவு,சுண்டிக்குளம், போன்ற பிரதேசத்திலும் கடற்கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் அங்கிருந்து வெளியேறி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

No comments:
Post a Comment