இலங்கை::இலங்கை சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நாகை மீனவர்கள் 111 பேருக்கான விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
மூன்றாவது முறையாக இன்று (06) திரிகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 11ஆம் திகதி கோடியக்கரைக்குத் தென்கிழக்கே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் 111 பேரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கைக் கடற்படையினர் கைது செய்து அவர்களது 15 படகுகளுடன் கொண்டு சென்றனர்.
பின்னர் திரிகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மீனவர்களை கடந்த 26ஆம் திகதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து சிறையில் அடைக்கப்பட்டனர்.
பின்னர் ஆறாம் திகதி வரை மீனவர்களின் விளக்கமறியல் நீட்டிக்கப்பட்டது.

No comments:
Post a Comment