Pages

Monday, January 6, 2014

27600 ஆக இருந்த படையினர் தொகை இப்போது 13150 ஆக குறைந்துள்ளது: மேஜர் ஜெனரல் ஹத்துறுசிங்க!

Monday, January 06, 2014
இலங்கை::யாழ்ப்பாணத்தில் கடந்த 4 வருடங்களுக்கு முன்னர் 27 ஆயிரத்து 600 ஆக இருந்த இராணுவத்தினரின் எண்ணிக்கை தற்போது 13 ஆயிரத்து 150 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட இராணுவத் தளபதியாக இருந்து கொழும்புக்கு இடமாற்றம் பெற்றுச் செல்லும் மேஜர் ஜெனரல் ஹத்துறுசிங்க தெரிவித்தார்.
 
யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரின் எண்ணிக்கை மேலும் குறைக்கப்படவுள்ளது. படைப்பிரிவுகளின் எண்ணிக்கையும் குறையும் எனவும் அவர் மேலும் கூறினார்.
 
இடமாற்றம் பெற்றுச் செல்லும் ஹத்துறுசிங்கவிற்கான பிரியாவிடை வைபவம் பாலாலி பாதுகாப்பு தலைமையகத்தில் நேற்று முன்தினம் சனிக்கிழமை நடைபெற்றது.
 
இந்த நிகழ்வில் பேசும்போதே ஹத்துறுசிங்க இவ்வாறு குறிப்பிட்டார்.
 
வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்று ஆட்சியமைத்திருக்கின்றது. இந்நிலையில் மாகாண அரசும் மத்திய அரசும் முரண்பட்டுக் கொள்ளாமல் நல்லுறவைப் பேணவேண்டும்.
 
இரண்டு தரப்புக்களும் பிரச்சினைகளைப் பேசித் தீர்க்க முன்வரவேண்டும் எனவும். கடந்த காலங்களைக் போன்ற முரண்பாடுகள் இனிவரும் காலங்களில் ஏற்பட்டுவிடக் கூடாது எனவும் இந்த நிகழ்வில் பேசும்போது ஹத்துறுசிங் மேலும் கூறினார்.

No comments:

Post a Comment