Sunday, December 8, 2013

முப்பது வருட கால கொடூர யுத்தத்திற்குப் பின்னர் நிம்மதியாக வாழ்ந்துவரும் தமிழ் மக்களை மீண்டுமொரு தடவை இன்னலுக்குள் தள்ளிவிடும் அதீதமான தீவிர முயற்சியில் தமிழ்த் தேசியக் புலிகூட்டமைப்பு!

Sunday, December 08, 2013
இலங்கை:: முப்பது வருட கால கொடூர யுத்தத்திற்குப் பின்னர்  நிம்மதியாக வாழ்ந்துவரும் தமிழ் மக்களை மீண்டுமொரு தடவை இன்னலுக்குள் தள்ளிவிடும் அதீதமான தீவிர முயற்சியில் தமிழ்த் தேசியக் புலிகூட்டமைப்பு.
 
முப்பது வருட கால கொடூர யுத்தத்திற்குப் பின்னர் தற்போது நிம்மதியாக வாழ்ந்துவரும் தமிழ் மக்களை மீண்டுமொரு தடவை இன்னலுக்குள் தள்ளிவிடும் அதீதமான தீவிர முயற்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களும்இ ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனும்இ அவருடன் இருக்கும் ஒருசில புதிய அரசியல்வாதிகளும் ஈடுபட்டுவருவதாகவே தமிழ் மக்கள் கருதுகின்றனர். அண்மைக்காலமாக இவர்கள் தெரிவித்துவரும் கருத் துக்கள்இ விடுத்துவரும் ஊடக அறிக்கைகள். நடந்து கொள்ளும் நடத்தைகள் இதற்குச் சான்று பகர்வனவாக உள்ளன.
 
கடந்த வாரம் பாராளுமன்றத்தில் தமிழ்க் கூட்டமைப்பின் எம்.பியான சிறிதரன்இ பிரபாகரனை வாழ்த்திப் பேசினார். இறந்துபோன அவருக்குப் பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்ததுடன் அவரை மாவீரனாகவும் சித்தரித்தார். இது தேவையற்றதொரு விடயம். இத்தகைய உரையினால் மக்களது மனங்களை வென்று அடுத்த தேர்தலிலும் தான் வெற்றிபெறுவதே சிறிதரன் எம்.பியின் நோக்கம் என்பது சிறு குழந்தைக்குக் கூடத் தெரிந்த விடயம். ஆனால் இவர் நினைப்பது போன்று இன்று வடக்கில் தமிழ் மக்களது மனநிலை இல்லை என்பதை அவர் அறியாமலிருப்பதுதான் வேதனைக்குரிய விடயமாகவுள்ளது.
 
இதேபோன்று தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் கலந்து கொள்ளப் போவதில்லை என்பதற்குக் கூறிவரும் கார ணங்களும் தேவையற்ற விடயங்களை உள்ளடக்கியதாகவுள்ளது. வடக்கில் முதல மைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நடந்து கொள்ளும் விதமும்இ விட்டுவரும் அறிக்கைகளும் இதுவரை நாட்டு மக்கள் அவர் மீது வைத்திருந்த மரியாதையை படிப்படியாக இல்லாமற் செய்து வருகிறது. சிறந்த நீதியரசராக இருந்த அவருக்கு ஒரு அரசியல்வாதி எனும் பாத்திரத்தை வகிக்க முடியாமல் உள்ளது.
 
வடக்கு கிழக்கில் தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர்களது தலையிடியால் மக் கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கையில் வடக்கு கிழக்கிற்கு வெளியே வாழ்ந்து வருகின்ற தமிழ் மக்களுக்கு மனோ கணேசன் மற்றும் அவரது கட்சியைச் சேர்ந்த சிலரது அறிக்கைகளாலும்இ நடத்தைகளாலும் எப்போது பேராபத்து உள்ளதோ எனத் தெரியாமலுள்ளது. மேல் மாகாணத்தில் தமிழரது வாக்குகளைப் பெறுவதற்காக தேர்தல் காலங்களில் மட்டும் இக்கட்சியைச் சார்ந்தவர்கள் நடத்திவரும் மேடை நாடகங்கள் மக்களை மடையர்களாக்கும் செயலாகவே உள்ளது.
 
சரிஇ அரசியல்வாதிகள்தான் தமது அடுத்த தேர்தல் வெற்றியை இலக்கு வைத்து இவ்வாறெல்லாம் நடந்து கொள்கிறார்கள் என்றால் சில இந்து அமைப்புக்கள் நாட்டில் என்ன நடக்கிறது என்பதைப் பரிபூரணமாக அறிந்து கொள்ளாது அர சியல் கட்சிகள் போன்று அறிக்கைகளை விட்டு வருகின்றன.
அரசியல்வாதிகள் போலவே அந்த அமைப்புக்களிலும் தமது தலைவர்இ செயலாளர் பதவிகளைத் தக்க வைப்பதற்காக இத்தகைய நாடகங்களை சமூகத்தில் பெரிய மனிதர்களாக இருக்கும் இவர்களும் சிறு பிள்ளைத்தனமாக நடந்துகொள்கிறார்கள்.
 
பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் தெரிவித்தது போன்று இறந்தவர்களை வைத்து இருப்பவர்களை இம்சைக்குள் தள்ளிவிட வேண்டாம் என்பதே உண்மை. அதேபோன்று காணாமற்போனவர்களை வைத்து இருப்பவர்களின் வாழ்வைக் கேள்விக்குறியாக்கி விடவும் வேண்டாம். அரசியல் நடத்த எத்தனையோ வழிமுறைகள் உள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு எத்தனையோ தேவைகள் உள்ளன. அவை தொடர்பாக ஆராய்ந்து ஆவன செய்யலாம். இதைவிடுத்து பழைய புண்ணைக் கிளறிக்கிளறி மருந்து கொடுப்பது போன்று அது தொடர்பாக மக்கள் மறந்திருந்தாலும் அதை ஞாபகப்படுத்தி மக்களை வேதனைக்குள்ளாக்குவதால் உங்களுக்கு பல அரச சார்பற்ற நிறுவனங்களிடமிருந்து இலட்சக்கணக்கில் பணம் கிடைக்கும்இ ஆனால் அந்த அப்பாவி மக்களுக்கோ நிம்மதிதான் பறிபோகும்.
 
இந்து அமைப்பு ஒன்று இந்து ஆலய விவகாரங்கள் தொடர்பாக சர்வதேசத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லவுள்ளதாக பத்திரிகைகளுக்கு வீர அறிக்கை விட்டுள்ளது. அறிக்கை நல்லாகவே உள்ளது. அறிக்கை விட்ட அமைப்பிற்கும்இ அதில் கையெழுத்திட்ட தலைவருக்கும் மக்களில் ஒரு சிறு தொகையினர் கை தட்டவே செய்வர். ஆனால் இது நடைமுறைக்குச் சாத்தியப் படாத விடயம். இனப்பிரச்சினைத் தீர்வு விடயம் தொடர்பாக அமெரிக்காஇ கனடாஇ தென்னாபிரிக்கா எனச் சர்வதேசத்திற்குச் சுற்றுலா சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரே வெறும் கைகளுடன் தான் திரும்பினர் என்பது இந்த இந்து அமைப்பின் தலைவருக்குத் தெரியாத விடயமல்ல.
 
உள்நாட்டு விடயங்களை உங்கள் அரசாங்கத்துடன் கலந்து பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள்இ அதுதான் முறை என்பதே சர்வதேசத்தின் பதிலாக அமைந் துள்ளது. பிரித்தானியாவில் தமிழ் மக்களது வாக்குகளை அபகரிப்பதற்காகவும்இ புலம்பெயர்ந்து அங்கு வாழும் தமிழரிடமிருந்து நிதியைப் பெறுவதற்காகவும் பிரதமர் கெமரூன் நாடகமாடி வருவது இன்னும் சிறிது காலத்தில் சகலருக்கும் புரியவரும். அப்போது பிரித்தானியாவின் உண்மையான வகிபாவம் என்ன வென்று அறிந்து கொள்ள முடியும்.
 
எனவே தமிழ்க் கூட்டமைப்பினர் அரசாங்கத்துடன் இணைந்து சென்று வடக்கு கிழக்கில் அபிவிருத்தியை மேற்கொள்ள வேண்டும். யுத்தக் கெடு பிடிக்குள் சிக்கி மீண்டும் மீண்டும் இயல்பு வாழ்விற்குத் திரும்பிக் கொண்டிருக் கும் மக்களுக்கு உதவிபுரிய வேண்டும். அதை விடுத்து மீண்டுமொரு இன மோதலுக்கு தமிழ் மக்களைத் தூண்டக் கூடாது. வடக்கு கிழக்கில் தற்போது வாழ்ந்துவரும் மக்களுக்கு உங்களைப் போன்று இந்தியாவிலும்இ கனடாவிலும்இ லண்டனிலும் வீடுகள் இல்லை. உங்களது பிள்ளைகளைப் போன்று வடக்கில் வாழும் மக்களது பிள்ளைகள் அரசாங்கப் புலமைப்பரிசில் பெற்று அமெரிக்காவிலும் லண்டனிலும் மருத்துவத்துறையில் பயிலவும் இல்லை. இவ் விடயங்கள் மக்களுக்கு இப்போது ஓரளவு தெரிந்து கொண்டு வருகிறது. இவை முழுமையாகத் தெரிந்து மக்கள் உங்களை வெறுத்து ஒதுக்குவதற்கு முன்னதாக அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு தீர்வினைப் பெற்று மக்களை நிம்மதியாக வாழ விடுங்கள்.

இதுவே விடயம் தெரிந்த மக்களது கோரிக்கையாகவும் உள்ளது. காணாமற்போனோரை வைத்து இன்னும் எத்தனை காலத்திற்குக் காலத்தை ஓட்டப் போகிஹர்கள். வவுனியா காளி கோவில் முன்பாக ஆயிரத்தொரு தேங்காய் அடித்து அதை உங்களது உறுப்பினரது ஆலையில் அரைத்து எண்ணெய் ஆக்கினீர்களே. கடவுளைக் கூட வைத்து அரசியல் நடத்தினீர்கள். அந்த அம்பாளே அமைதியாக இருக்கையில் நீங்கள் ஏன் ஆர்ப்பாட்டம் செய்து மக்களது இயல்பு வாழ்வைக் கெடுக்க முனைகிஹர்கள்டூ
 
எனவே இனிமேலாவது மக்கள் நலனுக்காகச் சிந்தித்துச் செயலாற்ற முன்வருமாறு பகிரங்க அழைப்பு விடுக்கின்றோம். வீரவசன அறிக்கைகள் விடுப்பதைத் தவிர்த்து விவேகமாகச் சிந்தியுங்கள். நீதியரசர்களாகவும்இ சட்டத்தர ணிகளாகவும்இ வைத்தியர்களாகவும்இ பொறியியலாளர்களாகவும்இ கல்விப் பணிப்பா ளர்களாகவும்இ ஆசிரியர்களாகவும் இருக்கும் நீங்கள் அரசியல்வாதியாகியதும் ஏன் படிக்காதவொரு முட்டாள் போன்று செயற்பட எத்தனிக்கிஹர்கள்டூ இனி யாவது உங்களை நம்பி வாக்களித்த மக்களுக்காக சிந்தித்துச் செயலாற்றுங்கள்.

No comments:

Post a Comment