Sunday, December 08, 2013
இலங்கை::பிரித்தானியாஇ வட அயர்லாந்தில் மனித உரிமைகளை எவ்வாறு பாதுகாத்தது என்பதை இப்போது முழு உலகமே அறியும். அத்தோடு ஆப்கானிஸ்தான்இ ஈராக் போன்ற நாடுகளில் அவர்கள் எவ்வாறு மனித உரிமைகளைப் பாதுகாத்தார்கள் என்பதையும் உலகம் அறியும். பிரித்தானிய சிப்பாய்களின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையினை மேற்கொண்டார்களாடூ
* பிரித்தானியாவின் பிரதமர் கமரோன்இ இந்த மகாநாட்டில் கலந்து கொள்ள முடிவெடுத்ததே அந்நாட்டில் வசிக்கும் புலம்பெயர் தமிழர்களை மகிழ்ச்சிப்படுத்தவேயாகும். அதில் ஓர் அங்கமாகவே இங்கு வந்த பின் னரான அவரது நடவடிக்கைகளும் அமைந்திருந்தன என்பது தெட்டத் தெளிவாகத் தெரிகின்றது. அதன் மூலம் அரசியல் இலாபம் தேடுவதே அவரது நோக்கம்
டூ வரவு செலவுத் திட்டம் அரசின் பொருளாதார வேலைத் திட்டத்திணை வெளிப்படுத்தவில்லை என எதிர்க்கட்சி கூறுகிறதேடூ
* 2005 ஆம் ஆண்டிற்குப் பின் வெளிவந்த வரவு செலவு திட்டங்களைப் போலவே 2013ஆம் ஆண்டின் வரவு செலவு அறிக்கையும் அரசின் பொருளாதார வேலைத்திட்டத்தை மிகத் தெளிவாக எடுத்துக் கூறி இருக்கின்றது. மஹிந்த சிந்தனைக்கு அமையஇ நாட்டை பொருளாதாரத்தை நோக்கி முன்னெடுக்கும் ஒரு வரவு செலவு திட்டமே இம் முறையும் முன் வைக்கப்பட்டுள்ளது. தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் பல யோசனைகள் இம்முறை இத் திட்டத்தில் அடங்கி இருப்பதை நடு நிலையில் நின்று அவதானித்தால் கண்டுகொள்ளலாம்.
நாட்டின் எல்லாப் பிரிவுகளையும் உள்ளடக்கிஇ அதே நேரம் நாட்டு மக்களின் கருத்துக்களுக்கும் செவி மடுத்து தயாரிக்கப்பட்டுள்ள இந்த வரவு செலவுத்திட்டம் எல்லா மக்களையும் கவனத்தில் கொண்டே உருவாக்கப்பட்டுள்ளது. அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட ரூபா 12,00ழூ கொடுப்பனவை தனியார்துறை ஊழியர்களுக்கும் பெற்றுக்கொடுக்கும்படி ஜனாதிபதி கேட்டுக் கொண்டார். அத்துடன் உற்பத்தி தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு வட்டியற்ற கடனாக இரண்டரை லட்சம் ரூபா வழங்கவேண்டும் என்ற யோசனையும் முன் வைக்கப்பட்டுள்ளது.
அதே போன்று விவசாயம் பெருந்தோட்டத்துறை ஆகியவற்றின் வளர்ச்சிக்காகவும் பல யோசனைகள் முன் வைக்கப்பட்டிருக்கின்றன. அத் துறைகளின் பொருளாதார வளர்ச்சி பற்றியும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
வேகமான பொருளாதார வளர்ச்சி யுடன் முன்னோக்கிச் செல்லும் ஓர் ஆசிய நாடு என்ற வகையில் எதிர்கால இலக்குகளை அடையக்கூடிய நோக்கும் முன்மொழிவுகளுக்கு இவ் வரவு செலவுத்திட்டத்தில் காணக்கூடிய தாகவே உள்ளது.
அப்படிப் பார்க்கையில் 2014 ஆம் ஆண்டிற்காக முன் வைக்கப்பட்ட வரவு செலவுத்திட்டமானது. ‘மக்கள் வரவு செலவுத்திட்டம்’ என்றே கூற வேண்டும். எதிர்க்கட்சியின் விமர்சனம் எப்போதுமே இப்படித்தான் அவர்கள் இதில் எந்தவித நன்மையினையும் காண்பதே இல்லை. குறைந்தபட்சம் வரவு செலவுத்திட்டத்தை நன்றாக ஆராய்ந்துகூட பார்க்காமல் அவர்கள் முன் வைக்கும் விமர்சனங்கள்இ முன்னெடுக்கும் ஆர்ப்பாட்டங்களும் அவர்களது அரசியல் தந்திரத்தினையே வெளிப்படுத்துகின்றது. எதிர்க்கட்சியின் இந்த செயற்பாட்டுக்கான மக்கள் பதில் என்ன என்பதை எதிர்வரும் தேர்தலில் தெரிந்து கொள்ளலாம்.
டூ இலங்கையில் நடந்து முடிந்த பொதுநலவாய மகா நாட்டைப் பற்றிய உங்கள் கருத்து என்னடூ
* எவராலும் விமர்சிக்க முடியாத அளவு முழுமையான ஒரு மகாநாட்டை மிகச் சிறந்த முறையில் நாம் நடத்தி முடித்தோம். அந்த மகாநாட்டில் கலந்து கொண்டவர்களிடமிருந்து நாம் எதிர்பார்த்ததைவிடவும் மிக அதிகமான ஆதரவு எமக்கு கிடைத்தது. மிக நேர்த்தியான வகையில் உயர்ந்த மகாநாடு ஒன்றினை நடத்தி முடிக்க கிடைத்ததையிட்டு நாம் அனைவரும் பெருமிதம் கொள்ளவேண்டும். இந்த மகாநாட்டின் தலைமைத்துவத்திலிருந்து நாடே பெருமை கொள்ளும் விதத்தில் எமது ஜனாதிபதி மகாநாட்டை வழி நடத்தினார். பொதுநலவாய உச்சிமகாநாட்டு வரலாற்றில் இதுவரை நடைபெற்றுவந்த எந்த ஒரு மகாநாட்டிற்கும் சளைக்காத அளவில் நாமும் இந்த மகாநாட்டை நடத்தி முடித்தோம். அது எமது நாட்டின் மதிப்பினை மேலும் அதிகரிக்க ஆதாரமாகி இருக்கின்றது. இதில் கலந்து கொள்ளத ஒரு சிலரைத் தவிர்ந்த ஏனைய அனைவரும் எமது நாட்டின் உண்மை நிலையினை புரிந்து கொண்டார்கள்.
அரச தலைவர்களின் உச்சி மகாநாட்டிற்கு சமாந்தரமாக நடைபெற்ற வர்த்தகர்களின் மகாநாடுஇ இளைஞர் மகாநாடுஇ பொதுமக்களின் மகாநாடு ஆகியனவும் மிகச் சிறப்பாக நடைபெற்றன. மிகவும் சிறந்த முறையில் நடைபெற்ற வர்த்தக மகா நாட்டின் பலன்கள் எதிர்காலத்தில் நாட்டுக்கு கிடைக்க இருக்கின்றது. சில பிரிவினர் எமக்கு எதிராக எழுப்பிய அர்த்தமற்ற குற்றச்சாட்டுக்கள் விமர்சனங்கள் ஆகியவற்றுக்கு அடிபணியாது இந்த மகாநாட்டை நாம் நடத்தியதுடன் இன்னும் இரண்டு வருடங்களுக்கு எமது நாட்டின் ஜனாதிபதி 53 நாடுகளைக்கொண்ட இவ் அமைப்பின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டமை எமது நாட்டிற்கு கிடைத்த பெருமையாகும். இதனால் இந்த அங்கத்துவ நாடுகளையும்இ அதன் மக்களையும் பிரதிநிதித்துவப் படுத்தும் வாய்ப்பு எமது ஜனாதிபதிக்கு கிடைத்துள்ளது. அதனை மிகச் சிறப்பாக செய்யும் ஆளுமையும் ஆற்றலும் அவருக்கு இருக்கின்றது.
டூ இதற்கு முன் இத் தலைமைப் பதவியினை வகித்த அவுஸ்திரேலியப் பிதமர் டோனி எபர்ட் இலங்கையை யதார்த்தபூர்வமாக நோக்கும் போது பிரித்தானிய பிரதமர் இதற்கு மாற்றமாக மனித உரிமைகள் பற்றி எமக்குப் பாடம் புகட்ட முயன்றதை நீங்கள் எவ்வாறு நோக்குகின்யர்கள்.டூ
* அவுஸ்திரேலியப் பிரதமர் தூய்மையான எண்ணத்துடனேயே எமது நாட்டுக்கு விஜயம் மேற்கொண் டார். இம் மகாநாட்டில் கலந்து கொள்ள வந்த அவருக்கு மறைமுகமான நிகழ்ச்சி நிரல் ஒன்று இருக்கவில்லை. பிரித்தானியாவில் இருக்கின்ற அள வில் இல்லாவிட்டாலும் கூட அவுஸ்திரேலியாவிலும் புலம்பெயர் ந்த தமிழர்களின் செயற்பாடுகள் இருக்கவே சென்கின்றன. ஆனாலும் அவர்களை மகிழ்ச்சிப்படுத்த வேண் டும் என்ற எண்ணத்துடன் பிரதமர் எபர்ட் செயற்படவில்லை. ஆனால் பிரித்தானியாவின் பிரதமர் கமரோன் இந்த மகாநாட்டில்
கலந்துகொள்ள முடிவெடுத்ததே அந்நாட்டில் வசிக்கும் புலம்பெயர் தமிழர்களை மகிழ்ச் சிப்படுத்தவேயாகும். அதில் ஓர் அங்கமாகவே இங்கு வந்த பின்னரான அவரது நடவடிக்கைகளும் அமைந் திருந்தன என்பது தெட்டத் தெளிவாகத் தெரிகின்றது. அதன் மூலம் அரசியல் இலாபம் தேடுவதே அவரது நோக்கம் ஆனால் அவர் இதைவிட புத்தி சாலித்தனமாகவும் சிறந்த முறையிலும் இராஜதந்திர முறையிலும் நடந்து கொண்டிருக்கலாம். அவர் அப்படி நட க்கத் தவறியதன் அவப் பெயர் பொதுநலவாயத்தின் தலைவராக இருக்கும் இரண்டாம் எலிசபெத் மகாராணியாருக்கும் பிரித்தானியாவிற்குமே போய்ச் சேரும்.

No comments:
Post a Comment