Saturday, December 07, 2013
இலங்கை::புலி ஆதரவாளர்கள் தம்மை ஓரம் கட்ட முயற்சிப்பதாக மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் தெரிவித்துள்ளார்.
சர்வதேச சமூகத்துடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வரும் புலி ஆதரவாளர்கள் இலங்கை படையினருக்கு சூழ்;ச்சித் திட்டங்களை கட்டவிழ்த்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிப்பதற்கான வீசா மறுக்கப்பட்டமை ஓர் சாதாரண விடயமாக கருதப்பட முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இம்மாதம் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்பதற்காக ஜகத் டயஸ் வீசா கோரி விண்ணப்பித்த போதிலும், வீசா அனுமதி மறுக்கப்பட்டுள்ளது,
ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்தி படையினரை தண்டிக்க சில புலி ஆதரவாளர்கள் முயற்சித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத்திற்கு எதிராக உலகின் ஏனைய நாடுகளில் போராடிய படையினருக்கு எதிராக இவ்வாறான அடக்குமுறைகள் பிரயோகிக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புலிபயங்கரவாதத்திற்க எதிராக போராடிய படையினரை தண்டித்து, பயங்கரவாதிகளை பாதுகாக்கும் கலாச்சாரம் உருவாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வீசா மறுக்கப்பட்ட விவகாரம் குறித்து கருத்து வெளியிட முடியாது என இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

No comments:
Post a Comment