Monday, November 11, 2013
இலங்கை::பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டை புறக்கணிப்பதன் ஊடாக இலங்கை தொடர்பில் மாற்றத்தை எதிர்ப்பார்க்க முடியாது என பிரித்தானியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
இதனால் இலங்கையில் நடைபெறும் மாநாட்டில் கலந்துகொள்வதற்கு பிரித்தானியா மேற்கொண்ட தீர்மானம் நியாயமானது என பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் வில்லியம் ஹேக் பிபிசிக்கு அளித்துள்ள செவ்வியில் தெரிவித்துள்ளார்.
மாநாட்டில் கலந்துகொள்வதன் ஊடாக மாத்திரமே எந்தவொரு பிரச்சினை தொடர்பிலும் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் இந்தியப் பிரதமர் கலாநிதி மன் மோகன் சிங், கலந்துகொள்ளாமை இந்திய - இலங்கை உறவுகளை பாதிக்காது என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷிட் தெரிவித்துள்ளார்.
புதுடில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்த கருத்தை வெளியிட்டதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

No comments:
Post a Comment