Pages

Monday, November 11, 2013

முழு அடைப்புக்கு ஆதரவு: மாணவர்களுக்கு (புலி ஆதரவு சைகோ) வைகோ அழைப்பு!


Monday, November 11, 2013
சென்னை::முழு அடைப்புக்கு ஆதரவு: மாணவர்களுக்கு  (புலி ஆதரவு  சைகோ) வைகோ அழைப்பு!

இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடத்தப்படுவதைக் கண்டித்து தமிழகத்தில் நாளை நடைபெறவிருக்கும் முழு அடைப்புக்கு மாணவர்கள் ஆதரவளிக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலர் (புலி ஆதரவு  சைகோ)  வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
 
நவம்பர் 12 ஆம் தேதி, தமிழகத்தில் முழு அடைப்புப் போராட்டத்தை வெற்றிபெறச் செய்ய வேண்டியது (புலி ஆதரவு)  தமிழர்களின் கடமையாகும்.
அதனை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பும் கடமையும்
 
இந்திய-இலங்கை அரசுகளின் சதித் திட்டம்.
உலகில் எந்த ஒரு இனத்துக்கும் இப்படிப்பட்ட துன்பம் நேர்ந்தால் அந்த இனத்தின் இளந்தலைமுறையினர் எரிமலையாக வெடித்திருப்பார்கள். பிரளயமாகச் சீறி இருப்பார்கள். ஆனால், தமிழ்நாட்டின் பிரதான அரசியல் கட்சிகளின் பித்தலாட்டத்தால், இளந்தலைமுறையினர் முழு உண்மை நிலையை அறியாத சூழலில் இருப்பது மனதுக்கு மிகவும் வேதனை தருகிறது. இளைஞர்களும், இளநங்கைகளும்தான் நீதிக்காக, உரிமைக்காக அச்சமின்றிப் போராடும் ஈட்டிமுனைகளாவார்கள்.
 
எனவே, மாணவக் கண்மணிகளைப் போராட்டத்துக்கு அழைக்கிறேன். உடன் பிறவாத சகோதரனாக அழைக்கிறேன். நாளைய முழு அடைப்புப் போராட்டத்தை வெற்றிபெறச் செய்யுங்கள். இவ்வாறு வைகோ அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment