Pages

Monday, November 11, 2013

காமன்வெல்த் கடை அடைப்புப் போராட்டம்: கோயம்பேட்டில் செவ்வாயன்று கடைகள் திறந்திருக்கும்!

Monday, November 11, 2013
சென்னை::காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று வலியுறுத்தி 21 அமைப்புகள் சார்பில் செவ்வாயன்று முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படுகிறது.
 
இந்த நிலையில், முழு அடைப்புப் போராட்டத்துக்காக கடைகளை அடைக்க மாட்டோம் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா கூறியுள்ளார்.
 
இலங்கை தமிழர் பிரச்சினையில் எல்லோருக்கும் அக்கறை உண்டு. வியாபாரிகளும் ஆதரவு அளிக்கிறார்கள். அதற்காக கடைகளை அடைத்தால் ஒவ்வொரு கடைக்காரர்களும் தனிப்பட்ட முறையில் நஷ்டப்படுவார்கள்.
எனவே ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், மறியல், பேரணி நடத்துங்கள். அதற்கு ஆதரவு உண்டு. அதை விட்டுவிட்டு கடைகளை அடைக்க யாரும் வற்புறுத்தக்கூடாது என்றும் விக்கிரம ராஜா அறிவித்துள்ளார்.
 
அதேப்போல, கோயம்பேடு வியாபாரிகளும் கடையடைப்பு செய்யப்போவதில்லை என்று அறிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment